பக்கம்:பனித்துளி.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 பனித்துளி

“சம்பகா! நான் பிறந்து வளர்ந்து பெரியவனாகி உன்னைக் கைப்பிடித்த பொன்னாட்டைத் தேடி வருகிறேன். பூப் போன்ற உன் மனத்தை எவ்வளவோ நோக வைத்து விட்டேன். அழகே உருவான உன் கண்கள் கண்ணிரை ஆறாகப் பெருக்க நான் காரணமாகி விட்டேன். என்னை நீ எப்படி ஏற்றுக் கொள்வாயோ, எனக்குத் தெரியவில்லை.”

சம்பகம் அப்படியே பிரமை பிடித்தவள் போல் அந்தக் கடிதத்தைக் கையில் வைத்துக் கொண்டு உட்கார்ந் திருந்தாள். பிறகு அதை ஆவலுடன் மார்பில் அணைத்துக் கொண்டாள். கண்களில் ஒற்றிக் கொண்டாள். குழந்தை பானு அப்பொழுது வீட்டில் இல்லை! பள்ளிக்கூடம் போயிருந்தாள்.

‘கண்ணே! உன் அப்பா வருகிறாராமடி, உன்னைப் பார்க்க! உனக்கு வெள்ளைக்கார பொம்மை யெல்லாம் வாங்கி வருவார். வைத்துக் கொண்டு விளையாடலாம்?” என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டாள்.

உவகை நிறைந்த மனத்துடன் சமையலறைக்குள் சென்று சமையற்கார அம்மாளிடம், ‘மாமி என் கஷ்டம் எல்லாம் விடிந்து விட்டது. அவர் வருகிறாராம்” என்று கூறினாள். சமையற்கார மாமி கையில் பிடித்த கரண்டியுடன் அப்படியே ஸ்தம்பித்து நின்றாள். ‘அப்படியா சம்பகம் அந்தக் கற்பகாம்பிகை கண் திறந்து விட்டாளடி!’ என்றாள்.

அந்தச் சந்தோஷச் செய்தியைச் சம்பகம் வேறு யாரிடத்திலும் தெரிவிக்கவில்லை. கணவன் வருகிறான் என்கிற பூரிப்பில் எழுந்த அந்த இன்பத்தை அவளே அனுபவித்தாள். அதை வேறு ஒருவருட னும் பகிர்ந்து கொள்ள அவள் மனம் இடம் கொடுக்கவில்லை. கணவனை வருஷக் கணக்கில் பிரிந்து இருந்த பிறகு ஒன்று சேரும் தம்பதிகளுக்குத் தான் அந்த இன்பத்தைப் பற்றிப் புரியும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/202&oldid=682307" இலிருந்து மீள்விக்கப்பட்டது