பக்கம்:பனித்துளி.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பணித்துளி - 201

சர்மாவின் வீட்டில் சில மாதங்களாகவே எதிர்பாராத சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. எவ்வளவோ ஆசையுடன் சீரும் சிறப்புமாகப் பணக்கார இடத்தில் பிள்ளைக்குக் கல்யாணம் பண்ணி வைத்தாள் மீனாட்சி அம்மாள். அவர்களின் வாழ் க் கை பிளவு பட்டுப் போனதையும் பார்த் தாள் அவள். அன்பும், ஆசையும் பணத்தால் விலை கொடுத்து வாங்க முடியாது என்பதையும் அவள் தெரிந்து கொண்டுதான் இருக்க வேண்டும். தகப்பனாரிடம் சங்கரன், நீலாவுக்கும், தனக்கும் நடந்த பேச்சைப் பற்றிக் கூறியபோது, அவ்வளவு வயதானவராக இருந்தாலும் அவருக்கே திகைப்பு உண்டாகியது. ‘அப்பொழுதே சொன்னேன். உன் அம்மாதான் கேட்க வில்லை. நமக்கு மிஞ்சிய சம்பந்தம் செய்யக் கூடாது என்றும் சொன்னேன். அவள் தான் கேட்கவில்லை’ என்று தம் மனைவி எதிரிலேயே அவளைப் பழித்தார் சர்மா.

‘'நான் என்னத்தைக் கண்டேன்? நீங்கள்தான் வேண்டாம் என்று உறுதியாகத் தடுத்து விடுவதுதானே?” என்று பதிலுக்கு அவரைப் பழித்தாள் மீனாட்சி.

‘நன்றாய் இருக்கிறதோ இல்லையோ அதிசயம்? புருஷனுடன் வாழ முடியாது என்று விட்டாளாமே? அதுவும், அதன் கர்வமும் ..!” என்று சமையற்கார மாமி வெறுமனே நொடிக்கு நூறு தரம் சொல்லிக் கொண்டிருந்தாள் சம்பகத்தினிடம். தற்கால அணுகுண்டு உலகத்தில் நடக்கும் அதிசயங்களை எல்லாம் அந்த அமமாள் அறிந்திருந்தால் இதைப்போய் ஒரு பிரமாதமான அதிசயம் என்று சொல்லி இருக்க மாட்டாள்.

“அவள் வேண்டாமென்று சொன்னால் நீ சரியென்று சொல்லி விட்டாயாடா? பெரிய மனுஷாள் என்றால் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாமா?’ என்று ருக்மிணி ஆத்திரத்துடன் கேட்டாள் சங்கரனைப் பார்த்து.

“என்னைத்தான் வேறு கல்யாணம் பண்ணிக் கொள்ளச் சொல்லி விட்டாளே?’ என்று கூறி, சங்கரன் கேலியாக நகைத்தான்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/203&oldid=682308" இலிருந்து மீள்விக்கப்பட்டது