பக்கம்:பனித்துளி.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202 m பனித்துளி

போகிறது! அ வ் வள வா வது பெரிய மனசு பண்ணினாளே?’ என்று மீனாட்சி முகத்தைக் கோணி அழகு காட்டுவது போல் வைத்துக் கொண்டாள்.

சங்கரனுக்கு நீலா அவனிடம் கூறிய வார்த்தைகள் சில காலம் வரையில் மனத்தை மிகவும் வருத்திக்கொண். டிருந்தன. பொன்மணியிலிருந்து இரும்பியதும் உறுதியுடன் தாயின் எதிர்ப்பைச் சமாளித்து காமுவையே கல்யாணம் பண்ணிக் கொண்டிருந்தால் தன் வாழ்க்கை வேறு விதமாக அமைந்திருக்குமே? அன்பு நிறைந்த மனைவியோடு ஆனந்தமாக இருந்திருக்கலாமே? இப்போது ஊரில் எல்லோரும் பேசிச் சிரிக்கும்படி ஆகிவிட்டதல்லவா? கஷ்டமோ சுகமோ ஒரு எல்லையை மீறிப் போகும்போது மனம் ஒருவித வைராக்கிய நிலையை அடைந்து விடுகிற தல்லவா? சங்கரனின் மனத்திலும் வைராக்கியம் நிறைந் திருந்தது. நாலுபேர் பேசிச் சிரிக்கும்படியாக அவன் வாழ்க்கை மாறிவிட்ட பிறகு அவன் நெஞ்சில் ஒரு விதத் துணிவும், உறுதியும் ஏற்பட்டன. இவ்வளவுக்கும் காரணம் அந்த நீலாதானே? புருஷனின் மான அவமானத்தில் ப ங் கு .ெ ப ற இஷ்டமில்லாத-சுயநலம் பிடித்த-ஒரு பெண்ணுடன் தன் வாழ்க்கை அமைவதை விட, அவளை விட்டுப் பிரிந்ததே மேல் என்று சங்கரன் தீர்மானித்தான். நாளடைவில் சங்கரனின் மனம் நீலாவின் வார்த்தைகளை மறக்க ஆரம்பித்தது. *

இவ்விதமே ஒரு வருஷம் ஆயிற்று. காமு தன்னுடைய ‘டிரெயினிங் முடிந்து ஒரு பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தாள். சங்கரன் காரியாலயத்துக்குப் போகும்போது அவளைப் பல முறைகள் வழியில் சந்தித் திருக்கிறான். பட்டிக்காட்டுப் பெண்ணாக இருந்த காமு சில வருஷங்களில் அடியோடு மாறிப்போய் படித்த பண்பாடுள்ள யுவதியாக இருப்பது அவனுக்கு மகிழ்ச்சியை அளித்தது. வழியில் எங்காவது பார்த்தால், செளக்யந்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/204&oldid=682309" இலிருந்து மீள்விக்கப்பட்டது