பக்கம்:பனித்துளி.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206 பனித்துளி

சந்தோஷ மிகுதியால் பேச முடியாமல் தவித்தான். சற்று நிதானித்து, பிரித்த கடுதாசியை எடுத்துக் கொண்டு பின் கட்டில் வேலையாக இருந்த சம்பகத்தைத் தேடிச் சென்று “மன்னி! உங்களுக்கு அதிர்ஷ்டகாலம் ஆரம்பமாகி விட்டது, சூரியனைக் கண்ட பனித்துளி போல் உங்களுக்கும் விடிவு காலம் ஆரம்பமாகி இருக்கிறது. பம்பாயிலிருந்து அண்ணா தாய் நாடு திரும்பி விட்டதைத் தெரிவித்திருக்கிறார். கூடிய சீக்கிரம் இங்கே வருகிறாராம்’ என்று சங்கரன் நாக் குழறக் கூறி முடித்தான். -

சம்பகம் சிலை போல் வாயடைத்து நின்றாள். அசோக வனத்தில் துயருடன் வாடிய லோகமாதாவிடம் அனுமன் ராமனைப் பற்றிய செய்தியை அறிவித்த போது, அந்த ராமதூதனை மனதார வாழ்த்தினாளாம் சீதாதேவி. அது போல சங்கரனை எப்படி எந்த விதமாக வாழ்த்துவது என்பது புரியாமல் திகைத்தாள் சம்பகம். பல முறை சுவாமி படத்தருகில் விழுந்து வணங்கினாள். ஆனந்த மிகுதியால் அவள் கண்களில் நீர் பெருகி வழிவதைப் பார்த்து சங்கரன், தான் ஒன்றும் இந்தச் சமயத்தில் பேசக் கூடாது என்று தீர்மானித்து சந்தோஷம் பூராவையும் சம்பகமே அனுபவிக் கட்டும் என்று நினைத்து அங்கிருந்து போய் விட்டான்.

சர்மா திருப்பித் திருப்பி தந்தியை வாசித்தார்.

‘அடியே! உன் பெரிய பிள்ளை வருகிறானாம். தெரியுமா சேதி?’ என்று மனைவியை இரைந்து கூப்பிட்டுப் பிறகு இருவருமாக அந்தச் சந்தோஷச் செய்தியை அனுபவித்தார்கள். . .

சங்கரன் காமுவின் வீட்டிற்குக் காரில் போய்க் கொண் டிருந்தாலும் அவன் மனம் அதை விட வேகமாக அவ்விடத்தை நோக்கிச் சென்றது. எதிர்பாராத விதமாக அதுவும் காலை வேளையில் சங்கரன் திடும் என்று வந்தது காமவுக்கும், அவள் தகப்பனாருக்கும் ஆச்சர்யமாக

இருந்தது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/208&oldid=682313" இலிருந்து மீள்விக்கப்பட்டது