பக்கம்:பனித்துளி.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பனித்துளி 207

“உட்கார் சங்கரா! ரொம்ப நாட்களாக உ ன் ைன க் காணவே இல்லையே?’ என்று விசர்ரித்தார் ராமபத்திர அய்யர். ==

‘வீட்டிலே ஏகப்பட்ட மாறுதல்கள் நடந்து விட்டன மாமா!” என்றான் சங்கரன். ராமபத்திர அய்யருக்குத் தூக்கிவாரிப் போட்டது!

“எல்லோரும் செளக்யம்தானே அப்பா? நீலா உங்கள்

வீட்டுக்கு வந்து விட்டாளா? குழந்தை போய் விட்டதாமே? என்னவோ எதற்கும் கொடுத்து வைக்க வேண்டாமா அப்பா?” என்று குடும்ப விஷயங்களையெல்லாம் விசாரித்

தார். *

சங்கரன் ஆவலுடன் சமையலறைப் ப க் க மே

பார்த்துக் கொண்டிருந்தான். அவனுக்கு அவர் பேசும் பேச்சுக்கள் ஒன்றும் சுவாரஸ்யப் புடவில்லை. இதற்குள் காமு ஏதோ வேலையாகக் கூடத்துக்கு வந்தவள் சங்கரனை பார்த்து, “ஏதேது! அத்தி பூத்தது. போல் வந்து விட்டீர்கள்? ரொம்ப நா ட் க ள் ஆயிற்றே?’ என்று கேட்டாள் குறும்பாகச் சிரித்துக் கொண்டு. H

பொன்மணி கிராமத்தில் எந்தச் சிரிப்பை தன்னுடைய தாக ஆக்கிக் கொள்ள வேண்டும் என்று நினைத்திருந் தானோ அதே கபடமற்ற குறும்புச் சிரிப்பை இன்று பார்த்து ஆனந்தமடைந்தான் சங்கரன். காமு சரேலென்று சமையல் அறைக்குள் சென்று விட்டாள். மறுபடி யும் ராமபத்திரய்யர் ஏதோ தொணதொணவென்று பேச ஆரம்பித்தார்.

‘மாசக் கணக்கில் பிறந்த வீட்டில் நீலாவை விட்டு வைத்திருக்கிறாயே சங்கரா. அழைத்து வந்து விடுவது தானே?’ என்று கேட்டார் ராமபத்திர் அய்யர்,

‘அழைத்து வருவதா? இனிமேல் அதெல்லாம் இல்லை மாமா. அவளுக்கும் எனக்கும் ஏற்பட்டிருந்த பந்தம் நீங்கி விட்டது. அவளுக்கு,என்னுடன் வாழ்க்கை நடத்துவதற்கு இஷ்டம் இல்லையாம். திரும்பத் திரும்ப சண்டையும் பூசலும்தான் ஏற்படுமாம். நான் போய் அவளை அழைத்த தற்கு அவள் கூறிய பதில் இது” என்றான் சங்கரன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/209&oldid=682314" இலிருந்து மீள்விக்கப்பட்டது