பக்கம்:பனித்துளி.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பனித்துளி 209

என்று சம்பகத்துக்காக அனுதாபப்பட்டார் அவர். அவர் சம்பகத்தைப் பற்றி பேசியதும் சங்கரனுக்குக் காலையில் வந்த தந்தியின் நினைவு வந்தது. ‘மாமா! என் மதனிக்கு விடிவு காலம் வந்து விட்டது. அண்ணா இன்னும் சில தினங் களில் இங்கே வரப் போவதாக இன்று காலையில் தந்தி வந்தது” என்றான்.

“அப்படியா? ரொம்ப சந்தோஷம் சங்கரா! அந்தப் பெண்ணின் பொறுமைக்குப் பலன் இல்லாமல் போகுமா? அதிர்ந்து ஒரு வார்த்தை பேசமாட்டாள் சம்பகம்’ என்று அவள் குணத்தைப் புகழ்ந்து பேசினார் ராமபத்திர அய்யர். மறுபடியும் சங்கரனுக்கு இக்கட்டான நிலைமை ஏற்பட்டது. காமுவை எனக்குக் கல்யாணம் பண்ணித் தருகிறீர்களா?” என்று அவன் எப்படிக் கேட்க முடியும்? ஏற்கெனவேயே அவன் வார்த்தைக்குத்தான் மதிப்புக் குறைந்து விட்டதே? “வருகிறேன் மாமா. இன்றோ நாளையோ அப்பா வந்து உங்களைப் பார்க்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்’ என்று கூறிவிட்டுப். புறப்பட்டான் சங்கரன். o

மூத்த பிள்ளை ஊரிலிருந்து வரப் போகிறான் என்று கடிதம் வந்தவுடன் சர்மா அவனை வரவேற்பதற்கு ஆயத் தம் செய்ய ஆரம்பித்தார். அவர் அடிக்கடி வெளியில் போவதும், தம் அறையில் உட்கார் இது யாருடனோ பேசுவதும் மீனாட்சி அம்மாளுக்கு ஒன்றுமே புரியவில்லை.

என்றும் போலவே சம்பகம் நடந்து கொண்டாள். அவளுடைய மனத்தில் பொங்கித் ததும்பும் மகிழ்ச்சியை அவள் ஒவ்வொரு பேச்சும் செய்கையும் காட்டிக் கொண் டிருந்தன. ஆனால் சிறிதாவது கர்வமோ, அகம்பாவமோ அவளிடத்தில் காணப்படவில்லை. அளவுக்கு மீறிய கஷ்டங் களினாலும், சோதனைகளினாலும் அவள் மனம் பக்குவம் அடைந்திருந்தது.

வழக்கம்'டோல் அவள் சர்மாவின் அறைக்குள் சென்று அவருடைய புஸ்தக அலமாரியை ஒழித்துச் சுத்தம் செய்து,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/211&oldid=682317" இலிருந்து மீள்விக்கப்பட்டது