பக்கம்:பனித்துளி.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210 பனித்துளி

அவைகளை ஒழுங்காக அடுக்கிக் கொண்டிருந்தாள். வெளியே போயிருந்த சர்மா வீடு திரும்பியதும் நேராகச் சமையலறைக்குள் சென்று சம்பகத்தைத் தேடினார். பிறகு வாசலில் தன் அறைக்குள் அவள் இருப்பது தெரியவே அங்கு வந்தார். --- o --

கருமமே கண்ணாயினார் என்கிறபடி சம்பகத்தின் உள்ளம் தன்னுடைய கடமைகளிலிருந்து நழுவாமல் இருப்ப தைப் பார்த்து சர்மா உளம் கனிந்தார். இன்றோ, நாளையோ புருஷன் ஊரிலிருந்து வரப்போகிறான். மேல் நாட்டில் படித்துப் பட்டம் பெற்றவன், இங்கே வந்த பிறகும் ஆயிரக் கணக்கில் சம்பாதிக்கும் திறமை உள்ளவன். ஒருதரம் பிழை செய்து அதிலிருந்து மீண்டு புது வாழ்வை நாடி வருகிறான். கணவன் வரப்போகிறான். தன்னுடைய கஷ்ட காலத்துக்கு விடிவு ஏற்பட்டு விட்டது. இனிமேல் இந்த மனிதர்களின் தயவு நமக்கு எதற்கு என்று அவள் இறுமாந்து விடவில்லை. காலையில் சர்மா குளிக்கும் வெந்நீரிலிருந்து இரவு அவர் சாப்பிடும் பால் வரையில் ஆக ஆேண்டியதைக் கவனித்துச் செய்துதான் வருகிறாள். பெரியவர்களுக்குத் தொண்டு செய்யும், பண்பு அவள் உள்ளத்தில் புதைந்து விட்டது. நாளை கணவன் வந்த பிறகும் சம்பகம் மாற மாட்டாள்.

உள்ளம் நெகிழ்ந்ததால் கண்களில் துளித்த நீ ைத் துடைத்துக் கொண்டே சர்மா, அம்மா, சம்பகம்! உனக்கென்று மாம்பலத்தில் ஒரு வீடு வாங்கி விட்டேன். அவன் வந்தால் நீ அங்கே உன் குடும்பத்தை நடத்த ஆரம்பிக்கலாம்” என்றார். பெரியவர் சொல்வதைக் கேட்டு சம்பகம் பேசாமல் நின்றாள்.

“நீயும், அவனும் இனிமேல் தனியாகத்தான் இருக்க வேண்டும். உனக்கு அவன், அவனுக்கு நீ. இடையில் நாங்கள் அவசியமில்லை. விருந்தாளிகளைப் போல் rr ardi வருவோம், போவோம். நீயும், அவனும் ஒருவரை ஒரு ர் புரிந்து கொண்டு வாழ்க்கை நடத்தத்தான் இந்த ஏற்பாடு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/212&oldid=682318" இலிருந்து மீள்விக்கப்பட்டது