பக்கம்:பனித்துளி.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பனித்துளி = 211

அதோடு, உனக்குச் சோதனைகள் ஆரம்பமான இந்த வீட்டில் இருந்து உன் மன நிம்மதியை மேலும் குறைத்துக் கொள்ள வேண்டாம்” என்றார்.

சம்பகம் தன்னுடைய அபிப்பிராயத்தைக் கூறுமுன், மீனாட்சி அம்மாள் அங்கு வந்தாள். சம்பகத்தைக் கவனித்து விட்டுச் சர்மாவைப் பார்த்து, ‘மாம்பலத்தில் வீடு வாங்கி யிருக்கிறீர்களாமே?” என்று கேட்டாள்.

“ஆமாம், விலை படிந்து வாங்கிய பிறகு உங்களிடம் சொல்லலாம் என்று இருந்தேன். நாளை மத்தியானம் அவன் வருகிறான். அதற்கு அடுத்த நாள் சம்பகமும், அவனும். அங்கே தனிக் குடித்தனம் ஆரம்பிக்கட்டும்” என்றார் சர்மா. மீனாட்சி அம்மாளின் சுபாவமான .ே கா. ப ம் தலையெடுத்தது. “வீடுதான் வாங்கியாகி விட்டது. வந்ததும் வராததுமாக இருக்கும் போதே தனிக் குடித்தனத் துக்கும் ஏற்பாடு பண்ணி விட்டீர்களா? நான் அவனைப் பார்த்து எத்தனை வருஷங்கள் ஆயின? அவனோடு எவ்வளவோ பேச வேண்டும் என்று எனக்கு ஆசையாக இருக்காதா?’ என்றாள்.

ஆசையாக இருந்தால் அவன் வீட்டிலே போய்ப் பேசுகிறது. உன்னை அங்கே போகக்கூடாது என்று நான் சொல்லவில்லையே. அதுவும் உன் வீடு தானே?’ என்று சாந்தமாகவே.பேசினார் சர்மா.

“ஆமாம். எல்லாம் என்னுடையதுதான்! பேசுவீர்கள்! அப்படி என்றால், ஒன்றாக எல்லோரும் இருந்து விட்டுப் போகிறோம், எதற்காகப் பிரித்து வைக்கிறீர்களாம்?”

சர்மா சிரித்தார். பிறகு அலட்சியம் நிறைந்த குரலில், “ஒன்றாக இருப்பதா? இத்தனை வருஷங்கள் சம்பகம் நம்முடன் ஒன்றாக இருந்தது போதுமே! இனிமேல் அவள் அவளுடைய வீட்டிலேயே இருக்கட்டும். உனக்குப் பெரிய பிள்ளையிடம் போய் இருக்க ஆசையாக இருந்தால் அங்கே போய் இரு. சங்கரனிடம் இருப்பதானாலும் இங்கேயே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/213&oldid=682319" இலிருந்து மீள்விக்கப்பட்டது