பக்கம்:பனித்துளி.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பணித் துளி 213

‘சங்கரா! அண்ணா வீட்டிற்கு இரண்டு மூட்டை அரிசி அனுப்ப வேண்டும். வண்டி பார்த்துக் கொண்டு வந்தாயானால் தேவலை. இன்றைக்குத் தேவையான சாப்பாட்டை காரிய’ரில் கொண்டு போங்கள். நாளைக்கு வெள்ளிக்கிழமை. காலையில் ஆடுப்பு மூட்டலாம். ஒரு பாயசம் வைத்து விடு சம்பகம்’ என்றாள்.

தாயாரையும், தகப்பனாரையும் நமஸ்கரித்து நின்ற சம்பகத்தையும், பிள்ளையையும் பார்த்துக் கண் கலங். கினாள் மீனாட்சி அம்மாள்.

“என்னவோ அப்பா! இனிமேலாவது நீ குடியும் குடித்தனமுமாக இருக்க வேண்டும். போய் விட்டு வா சம்பகம். அவனைப் பார்த்துக் கொள்’ என்றாள்.

பேயாக இருந்தாலும் தாய் என்பார்கள். தாயின் அன்புக்கு முன் அவளுடைய கொடுமைகள், துர்க்குணங்கள் யாவும் மறைந்து போயின. நாட்டுப் பெண்ணின் அதிர்ஷ்டத் தினால்தான் பிள்ளை தங்களை விட்டுப் போய் விட்டான் என்று தன் வெறுப்பைச் சம்பகத்தின் பேரில் காட்டி வந்தாள் மீனாட்சி அம்மாள். இது ஒருவிதமான அறியாமை என்றுதான் சொல்ல வேண்டும். இப்பொழுது அவளுக்கு நாட்டுப் பெண்ணின் அதிர்ஷ்டத்தில் அபாரமான நம்பிக்கை விழுந்து விட்டது.

மறுபடியும் பொன்மணி கிராமத்துப் பெருமாள் கோவிலுக்கு முன்பு நாம் சந்திக்கிறோம். சங்கரனும் காமுவும் அங்கு சந்தித்து மணம் செய்து கொள்ளும் போது நாமும் சந்திக்க வேண்டியது அவசியமல்லவா? சங்கராந்தி கழித்து ஆறேழு தினங்களே ஆகி இருந்தபடியால் கிராமத்தின் சுற்றுப் புறங்களையும், வயல் வெளிகளையும், வீடுகளையும் பனிப்படலம் லேசாக மறைத்துக் கொண் டிருந்தது. மூலஸ்தானத்தில் திருத்துழாய் மார்பும், அதில் பிரியாமல் வாசம் செய்யும் ஸ்ரீ மகாலட்சுமியுடனும்

L.-14.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/215&oldid=682321" இலிருந்து மீள்விக்கப்பட்டது