பக்கம்:பனித்துளி.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214 பனித்துளி

எம்பெருமான் வீற்றிருந்து சேவை தந்தார். சத்தியத்தை நிலைநிறுத்தவும், அன்பை வளர்க்கவும் பகவான் யாருக்கும் எந்த சமயத்திலும் துணை புரிகிறான். ராமபத்திர அய்யர் எளிய வாழ்க்கை நடத்தினாலும் உண்மை தவறாதவர். அன்பில் சிறிதும் குறைவில்லாதவர். அவர் பங்கில் பகவான் இராமல் போவானா? கல்யாண மண்டபத்தில் பொன்மணி கிராம்த்து ஜனங்களில் சில பேர் கூடி தம்பதியை ஆசீர்வதிக்க வந்திருந்தார்கள்.

இரண்டு தினங்களுக்கு முன்பு சர்மா தம் நண்பரைக் கண்டு, பிள்ளையின் கருத்தை வெளியிட்டார். காதும் காதும் வைத்தமாதிரிக் கோவிலில் கல்யாணத்தை முடித்துக் கொண்டு வந்தால் போதும் என்று ராமபத்திர அய்யரிடம் தெரிவித்தார். இந்த விஷயத்தை ராமபத்திர அய்யர் காமுவிடம் தெரிவித்தபோது, காமுவுக்கு ஒன்றும் புரிய வில்லை. கனவு காண்கிறோமா என்று நினைத்தாள். அன்று விடியற்காலம் கண்டதுதான் கனவு. இது நிஜம் என்று தீர்மானித்துக் கொண்டாள் காமு.

விடியற்காலம் சுமார் நான்கு மணிக்குக் காமு ஒரு சுப சொப்பனம் கண்டாள். சுடர் விடும் குத்துவிளக்கின் ஜோதியிலிருந்து அழகிய பெண் ஒருத்தி எழுந்து காமுவை நோக்கி வந்தாள். அவள் கையில் அழகிய செந்தாமரை மலர் இருந்தது. இந்தா இதை வாங்கிக் கொள்” என்று கை நீட்டி அவளிடம் கொடுத்தாள். மலர் மங்கை. ஆஹா! அந்த மலரின் செளந்தர்யம்தான் எப்படிப்பட்டது! அதையே உற்றுப் பார்த்து ஆனந்தம் அடைந்தாள் காமு. ‘இதை இப்போதே கொண்டு போய்ச் சங்கரனிடம் கொடுத்து விட்டு வரவேண்டும்’ என்று சொப்பனத்தில் கூட அவள் மனம் எண்ணியது. மலரைக் கையில் வைத்து அதன் அழகில் ஈடுபட்டிருக்கும்போது, மலர்மங்கை மறைந்து போனாள்.

கண்களைக் கசக்கிக் கொண்டு காமு எழுந்தவுடன் தகப்பனாரிடம் இந்தச் சொப்பனத்தைப் பற்றிக் கூறினாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/216&oldid=682322" இலிருந்து மீள்விக்கப்பட்டது