பக்கம்:பனித்துளி.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பனித்துளி 215

அவரும் இது ஏதோ நல்விளைவுக்காக ஏற்பட்டது என்று நினைத்து இருந்து விட்டார்.

அன்று பகல்தான் சர்மா, ராமபத்திர அய்யரின் வீட்டைத் தேடி வந்தார். அவரைக் கல் யானத்துக்குச் சம்மதிக்கவும் வைத்தார். அடுத்த நாள் காலை பொன்மணி கிராமத்தின் பெருமாள் கோவிலில் காமுவும், சங்கரனும் சந்தித்தனர். தெய்வ சன்னிதானத்தில் ஆடம்பரமில்லாமல் காமுவின் கரம் பிடித்தான் சங்கரன்.

நிறைந்த உள்ளத்தோடும், ஆசையோடும் ராமபத்திர அய்யர் அட்சதை துரவித் தம்மை நமஸ்கரித்த தம்பதியை ஆசீர்வதித்தார். விசாலாட்சி இருந்தால் அவள் எவ்வளவு பூரித்துப் போவாள்?’ என்று சிறிது நேரம் மனைவியையும் நினைத்து வருந்தினார் அவர். - ‘ராமபத்தி, ! குழந்தைக்குக் கல்யாணம் ஆவதற்கு நாட்களானாலும் நல்ல இடமாக வாய்த்து விட்டது” என்று குடும்ப நண்பர் சுப்பரமணி தம் சந்தோஷத்தை அறிவித்தார்.

‘எல்லாம் அவன் கிருபை அப்பா” என்று மூலஸ்தானத் தில் இருக்கும் பகவானைச் சுட்டிக் கைகளைக் கூப்பிக் கொண்டார் ராமபத்திர அய்யர்.

கல்யாணம் முடிந்தவுடன் ராமபத்திர அய்யரை யும் தன்னுடன் பட்டணத்துக்கே வந்து விட வேண்டும் என்று அழைத்தான் சங்கரன். எளிய வாழ்க்கையில் பற்றுடைய அவர் கெட்டகாலம் பொன்மணியிலேயே இருப்பதாகக் கூறி விட்டார். தகப்பனாரைப் பிரிந்து செல்லும் காமு அன்று சகுந்தலை கணவர் ஆசிரமத்தில் அடைந்த துயரை அடைந்தாள். சீதை ஜனகரைப் பிரிந்தபோது ஏற்பட்ட துயரம் காமுவுக்கும் ஏற்பட்டது. அப்பா!’ என்று கண்ணிர் பெருக அவர் தோளில் முகத்தைப் புதைத்துத் தேம்பினாள் காமு. நீங்கள் எங்களோடு வந்து விடுங்கள் அப்பா. உங்களை யார் கவனிப்பார்கள்!” என்று குழந்தை போல் அவர் கைகளைப் பற்றி அழைத்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/217&oldid=682323" இலிருந்து மீள்விக்கப்பட்டது