பக்கம்:பனித்துளி.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216 . பணித்துளி

‘அம்மா! புக்ககம் உன்னுடைய வீடு. என்னுடையது அல்ல. சரீரத்தில் தெம்பு இருக்கிற வரையில் இங்கே இருக் கிறேன். முடியாமல் போனால் பிறகு வருகிறேன். நீ புத்திசாலியாக நடந்து கொண்டு பிறந்த இடத்துக்கும், வீட்டுக்கும் பெருமையைக் கொண்டு வா காமு’ என்றார்.

காரில் தன் பக்கத்தில் உட்கார்த்து யோசனையில் ஆழ்த் திருந்த காமுவின் அழகிய வாடிய முகத்தை ஒரு கையால் பிடித்துத் தன் முகத்துக்கு நேராகத் திருப்பினான் சங்கரன். அகன்ற அவள் கண்களில் நீர் திரண்டு நிற்பதைப் பார்த்ததும் அவன் மனத்தைக் கசக்கிப் பிழிவது போல் இருந்தது. நீலா அழும்போது அவ்வித உணர்ச்சி அவனுக்கு ஏற்படவில்லை. இது அதிசயம்தானே?

‘காமு! அப்பாவை விட்டு விட்டு வந்திருக்கிறோமே என்று வருந்துகிறாயா? ஒவ்வொரு விடுமுறை நாளிலும் உன்னைப் பொன்மணிக்கு அழைத்து வருகிறேன். எங்கே என்னைப் பார்த்துச் சிரிக்க வேண்டும்?’ என்று கொஞ்சினான் சங்கரன்.

முத்துப் போன்ற தன் பற்கள் தெரிய இளநகை புரிந்த காமுவை சங்கரன் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே வந்தான். தூரத்தில் பொன்மணி கிராமம் மறைந்து கொண்டே வந்தது. சாலையில் இரு பக்கங்களி அலும் இருந்த வயல்களில் பயிர்கள் மீது பனித்துளிகள் சிதறி ஜவலித்துக் கொண்டிருந்தன. கிழக்கே சூரியன் உதயமாகி மேலே எழும்பி வந்ததும் அத்துளிகள் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போயின. வாழ்க்கையில் ஏற்படும் கஷ்டங்களும் பகவானின் அருளின் முன்பு பனித்துளிக்குச் சமானம்தான் என்று காமு சங்கரன் இருவரும் புரிந்து கொண்டார்கள். o

முற்றும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/218&oldid=682324" இலிருந்து மீள்விக்கப்பட்டது