பக்கம்:பனித்துளி.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பனித்துளி 23

இருக்கும் அவனுக்குத் தன் பெண் நீலாவை மணமுடிக்க ஆசைப்பட்டார் மகாதேவன். இரண்டொரு தடவை சர்மாவிடம் சங்கரனின் ஜாதகத்தைக் கொடுக்கும்படியும் கேட்டார். தன்னுடைய அந்தஸ்தை விட ஒரு படி மேலாக இருக்கும் மகாதேவனுடன் சம்பந்தம் செய்வதற்கு யோசித் தார் சர்மா. மூன்று வேளையும் சோபாவில் சாய்ந்து நாவல் களைப் படித்துக் குவிக்கும் நீலா, கர்னாடகப் பழக்க வழக்க முள்ள தன் மனைவியிடம் மாட்டுப் பெண்ணாக நடந்து கொண்டு நல்ல பெயர் எடுப்பாளா என்பது அவருக்குச் சந்தேகமாக இருந்தது.

ஒரு தினம் மகாதேவனுடன், நீலாவைப் பார்ப்பதற் காகச் சென்றிருந்தார் சர்மா. ஹாலில் கிடந்த சோபா ஒன் றில் அமர்ந்து புஸ்தகம் எதையோ படித்துக் கொண் டிருந்த நீலா, இவர்களைப் பார்த்ததும் ஒரு சிறு புன்னகை யுடன் மறுபடியும் புஸ்தகம் படிப்பதில் ஈடுபட்டாள். சர்மா தன் நண்பருடன் அங்கு இருந்த நாற்காலியில் உட்கார்ந்த பிறகு கூட நீலா அந்த இடத்தை வி ட் டு எழுந்திருக்க வில்லை. -

‘நீலு! அம்மாவிடம் போய் இரண்டு டம்ளர்களில் காபி கொண்டு வரச் சொல்” என்று தகப்பனார் கூறிய பிறகுதான் ஒருவித அலட்சியத்துடன் அவள் எழுந்து உள்ளே சென்றாள்.

நீலா அணிந்திருந்த பஞ்சாபி உடையும், இரட்டைப் பின்னலும் அவள் கொடி போன்ற உடலுக்கு அழகாகத் தான் இருந்தன. இருந்தாலும், தழையத் தழைய கொசுவம் வைத்துக் கட்டிக் கொண்டு, நெற்றியில் பளிச் சென்று குங்குமம் ஒளிர, இழுத்துப் போர்த்திய தலைப்புடன் கணவனைப் பிரிந்திருக்கும் கவலையைச் சிறிதும் முகத்தில் காட்டாமல் பதவிசாக இருக்கும் தன்னுடைய மூத்த நாட்டுப் பெண் சம்பகத் துடன் நீலாவை ஒப்பிட முடிய வில்லை சர்மாவினால்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/25&oldid=682328" இலிருந்து மீள்விக்கப்பட்டது