பக்கம்:பனித்துளி.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 . பனித்துளி

இரண்டு வெள்ளி டம்ளர்களில் காபியைக் கொண்டு வந்து மேஜை மேல் வைத்துவிட்டு, நீலா ஒய்யாரமாகச் சாய்ந்து கொண்டு சோபாவில் உட்கார்ந்தாள்.

“குழந்தை படித்துக் கொண்டிருக்கிறாளா?’ என்று கேட்டார் சர்மா.

“பி. ஏ. முடித்தாகி விட்டது. மே லே படிப்பதற்கு அப்பாவுக்கு இஷ்டமில்லை. அம்மாவும் குடும்ப வேலை களில் பழக்கம் ஏற்பட வேண்டும் என்று சொல்லுகிறாள்’ என்றாள் நீலா, களுக் கென்று சிரித்துக் கொண்டே.

“பள்ளிக்கூடங்களில் தான் சமையல் கலையை ஒரு பாடமாக வைத்திருக்கிறார்களே இந்தக் காலத்தில்!” என்றார் சர்மா.

“என்ன வைத்திருக்கிறார்களோ? நாலு பேருக்கு உப்புமா கிளறி காபி போட வேண்டுமானால் தெரிகிற தில்லை இவர்களுக்கு! ஒருத்தருக்கு அரை ஆழாக்கு ரவை வேண்டுமானால் நாலு பேருக்கு கால்படி என்று அளந்து, உப்பை நிறுத்து, தாளிதம் செய்ய வேண்டிய சாமான்களை நிறுத்து எதற்கு எடுத்தாலும் தராசையும் படியையும் தேட வேண்டியிருக்கு. வாணலியைப் போட்டுக் கண் திட்டத் திற்கு நெய்யோ, எண்ணெயோ ஊற்றி உத்தேசமாக ரவை யைக் கொட்டிக் கிளறி விடுவாள் என் சம்சார்ம். நாலு பேருக்கு மேல் இரண்டொருத்தர்கூட சாப்பிடலாம்.”

மகாதேவன் இவ்விதம் கூறிவிட்டு, நீலாவைப் பார்த்துச் சிரித்தார். நீலாவின் சிவந்த முகம் மேலும் சோப்த்தால் சிவந்தது. ஜிவ்வென்று பறந்து போகும் புறாவைப்போல் மெல்லிய வெண் மஸ்லின் மேலாக்குப் பறக்க மாடிப்படி களில் ஏறி உள்ளே போய் விட்டாள்.

“அடடா! நீங்கள் தமாஷ-க்குச் சொடானதை நிஜம் என்று கோபித்துக் கொண்டு விட்டாளே குழதை?’ என்று அனுதாபப்பட்டார் சர்மா.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/26&oldid=682329" இலிருந்து மீள்விக்கப்பட்டது