பக்கம்:பனித்துளி.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பணித்துளி 25

“அவளுக்குத் தொட்டதற்கெல்லாம் கோபம் வரும், சார் கொஞ்சம் செல்லமாக வளர்ந்த பெண்” என்று பெருமையுடன் கூறினார் டாக்டர்.

சர்மா வீட்டிற்குக் கிளம்புவதற்கு முன்பு மகாதேவன், “நாளைக்கு வெள்ளிக்கிழமை. ஜாதகம் கேட்பதற்கு உங்கள் வீட்டிற்கு ராகு காலத்துக்கு மேல் வருகிறேன். பிறகு உங்கள் வீட்டிலிருந்து பெண்களும் வந்து நீலாவைப் பார்க்கட்டும்” என்றார்.

ஆகட்டும். யோசித்துச் சொல்லுகிறேன். சங்கரன் ஊரில் இல்லை” என்று கூறிவிட்டு வந்து விட்டார் சர்மா. அதன் பிறக டாக்டர் மகாதேவன் இரண்டு மூன்று தடவைகள் சர்மாவின் வீட்டிற்கு ஜாதக விஷயமாகப் போயிருந்தார். அப்பொழுது சர்மா வீட்டில் இல்லை. அவர் மனைவி மீனாட்சி அம்மாளே மகாதேவனுடன் பேசும்படி நேரிட்டது. இன்னொருவருடைய குடும்ப விவகாரங்களை விசாரிப்பதில் ஆண்களை விடப் பெண்களுக்கு சாமர்த்தியம் அதிகம். நொடிப் பொழுதில் மகாதேவனைப் பற்றியும், அவர் அந்தஸ்தைப் பற்றியும், அவர் பெண் நீலாவைப் பற்றி யும் மீனாட்சி அறிந்து கொண்டாள். மூத்த நாட்டுப் பெண் சம்பகத்தைப் போல் இல்லாமல் நீலா. பணக்காரியாக இருப்பது அவள் மனத்துக்கு ஆறுதலாக இருந்தது. அண்டாவிலிருந்து குடம் வெள்ளிப் பாத்திரங்கள் வாங்கவும், தங்க முலாம் பூசிய டீ செட்டுகள் வாங்கவும் சந்தர்ப்பம் இருக்கிறது என்று நினைத் துச் சந்தோஷப் பட்டாள் மீனாட்சி. சீரும், சிறப்புறமாகத் தடபுடலாக சங்கரனின் கல்யாணத்தை நடத்த வேண்டும் என்கிற ஆசை யால் ஒவ்வொரு நாளும் மகாதேவனிடம் சங்கரனின் ஜாதகத்தைக் கொடுத்துவிடத் துடித்துக் கொண்டிருந் தாள் அவள்.

சர்மா தீர்மானமாகத் தன் அபிப்பிராயத்தை அவளிடம் ஒன்றும் கூறாக தால் மீனாட்சி சிறி , கயங்கிக் கொண்

டிருந்தாள், வலிய வரும் ரீதேவியை உதைத்துத் தள்ளுவது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/27&oldid=682330" இலிருந்து மீள்விக்கப்பட்டது