பக்கம்:பனித்துளி.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 பனித்துளி

போல் இருந்தது சர்மாவின் மெளனம். அவர் சம்மதம் தெரிவிக்கா விட்டாலும் அடுத்த முறை மகாதேவன் வரும் போது கட்டாயமாக சங்கரனின் ஜாதகத்தைக் கொடுத்து விடுவது என்று தீர்மானித்துக் கொண்டிருந்தாள் மீனாட்சி.

பொன்மணி கிராமத்தில் சங்கரன் காமுவின் வீட்டிற்கு அடிக்கடி வந்து போய்க் கொண்டிருந்தான். அவன் வரும் போதெல்லாம் ராமபத்திரய்யர் அவனுக்கு ஆசார உபசாரங்கள் செய்தார். பெரிய அந்தஸ்தில் இருக்கும் தன் நண்பனின் பிள்ளை தன் வீட்டைத் தேடி வந்து இவ்வளவு சரளமாகப் பழகுவது அவருக்கு ஆனந்தத்தை அளித்தது. நகரவாசத்தில் கி ைட க் கா த ருசியுள்ள அநேக பதார்த்தங்களைச் சமைத்துப் போடும்படி விசாலாட்சியிடம் கூறினார். கொல்லையில் விளைந்த முளைக்கீரையை மோர்க் கூட்டு செய்யும்படி கூறினார். பிஞ்சுக் கத்திரிக்காயை எண்ணெய்க் கறி செய்து போட்டாள் விசாலாட்சி.

எல்லாவற்றிற்கும் மேலாக ராமபத்திரய்யரின் அன்பு சங்கரனின் மனத்தை நெகிழச் செய்தது. பட்டினத்தில் தன் வீட்டில் இருக்கும் பெண்களிடம் இல்லாத ஒரு பெருந் தன்மையைக் காமுவின் குணத்தில் கண்டான். அன்பும் அறிவும் அவள் கண்களில் சுடர் விட்டன.

மதனி சம்பகம் சதா துக்கத்தில் மூழ்கி இருப்பவள். என்னதான் அவள் சிரிக்க முயன்றாலும் துயரம் ததும்பும் அவள் பார்வை மனசைக் காட்டிக் கொடுத்து விடும். தமக்கை ருக்மிணியின் அகம்பாவமும், யாரையும் மதியாத குணமும் அவனுக்கு அவளிடம் உள்ளூர ஒருவித வெறுப்பை ஏற்படுத்தி விட்டிருந்தன. தாயாருக்கு, பணத்தைத் தவிர வேறு ஒன்றையும் உலகத்தில் முக்கியமாக நினைக்கும் சுபாவம் கிடையாது. தானும், தன் குழந்தைகளும் அமோகமாக வாழ வேண்டும். இதற்காகப் பிறத்தியார் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் பார்த்துச் சகிக்கும் மனசைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/28&oldid=682331" இலிருந்து மீள்விக்கப்பட்டது