பக்கம்:பனித்துளி.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பனித்துளி 33

இங்கே என்ன வேலை பாழாய்ப் போகிறது?’ என்று சற்று உரக்கக் கூறியவாறு விசாலாட்சி கொல்லை வாசற் படியில் வந்து நின்றாள். ராமபத்திர அய்யர் திடுக்கிட்டுத் திரும்பிய போது அவள், சங்கராந்தி போய் காரடை நோன்பும் வரப் போகிறது! பார்த்துக் கொண்டே இருந் தால் ஆடி பிறந்து மறுபடியும் தை பிறக்கக் காத்துக் கொண்டிருக்க வேண்டியதுதான். கன்யாகுமரி மாதிரி வளர்ந்து நிற்கிறது. பெண். வெளியிலே தலை காட்ட முடிய வில்லை...’ என்றாள் படபடப்போடு.

விசாலாட்சி கோபத்துடன் பேசுவதன் காரணத்தை, அவர் ஒருவாறு ஊகித்துக் கொண்டவராக, ‘இப்போ என்னை என்ன செய்யச் சொல்றே?’ என்று கேட்டார்.

“முத்தையாவின் கடுதாசிக்கு என்ன பதில் எழுதப் போகிறீர்கள்?’ என்று பளிச் .ெ ச ன் று கேட்டாள் விசாலாட்சி.

“அவனுக்கு வயசாகிறதே ஒழிய புத்தி இல்லையே? நாற்பது வயதுக்கு மேலே என்ன கல்யாணம் வேண்டி இருக் கிறது? பெண்ணுக்குக் கல்யாணம் பண்ண வேண்டுமானால் இவன் கல்யாணம் பண்ணிக் கொள்ள வேண்டுமா என்ன? நாலு காசை விட்டெரிந்தால் நான் நீ என்று யாராவது செய்து விட்டுப் போகிறார்கள்? பெண்ணுக்குக் கல்யாணம் நிச்சயம் ஆனதும் தெரிவித்தால் நீ தான் போய் எல்லா வற்றையும் கவனித்துச் செய்து விட்டு வாயேன்.”

“உங்களிடம அவன் என்ன யோசனையா கேட்டிருக் கிறான்?’ என் றாள் விசாலாட்சி கொஞ்சம் பரிகாசமாக

‘வயசாகியும் புத்தி இல்லையே என்று தான் சொல்லு கிறேன். சங்கரன் இருக்கிறோனே, என்ன அறிவுடன் பேசு கிறான்?’ என்றார் ராமபத்திரப்யர். -

“என் தட்பி ஒன்றும் அறிவு கெட்டுப் போகவில்லை. சங்கரன் என்னவோ பிரமாதமாகச் சாதிக்கப் போகிறான் என்று நினைத்துக் கொண்டிருங்கள். பணம் பணத்தோடு தான் சேரும். நாலாயிரம் சம்பாதிக்கிறவன் பிள்ளை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/35&oldid=682339" இலிருந்து மீள்விக்கப்பட்டது