பக்கம்:பனித்துளி.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 பனித்துளி

நாற்பது ரூபாய் சம்பாதிக்கிறவர் பெண்ணைக் கல்யாணம் பண்ணிக் கொள்ளத்தான் வந்திருக்கிறான், பொன்மணியை தேடிக் கொண்டு.”

விசாலாட்சி விடுவிடு என்று எழுந்து உள்ளே போனாள். இதுவரையில் சமையலறை ஜன்னல் வழியாகப் பெற்றோரின் சம்பாஷணையைக் கேட்டுக் கொண்டிருந்த காமுவின் கண்களிலிருந்து முத்துப் போல் இரண்டு துளிகள் நீர் கன்னத்தில் வழிந்தது.

3. கீலா போட்டியிட்டாள்.

மீனாட்சியின் மத்தியானத் தூக்கம், கலைந்ததும் முதன்

முதலில் அவசரமாக சங்கரனின் ஜாதகத்தைப் பெட்டி யிலிருந்து எ டு த் து வைத்துக்கொண்டாள். அன்று சாயங்காலம் டாக்டர் மகாதேவன் வந்தால் சாக்குப்போக்கு ஒன்றும் சொல்லாமல் ஜாதகத்தைக் கொடுத்து விட வேண்டும் என்றும் தீர்மானித்துக் கொண்டாள். ஜாதகத்தை எடுத்துச் சமையலறையில் இருக்கும் சுவாமி படத்தின் அருகில் வைத்து விட்டுச் ச ைம ய ல ைற ைய ஒரு கண்ணோட்டம் பார்த்தாள் மீனாட்சி.

இரண் டாந்தரம் சிற்றுண்டிக்காக அங்கே யாதொரு ஏற்பாடும் நடக்கவில்லை. மணி இரண்டுக்கு மேல் ஆகியும் வீட்டில் எல்லோரும் பேசாமல் இருப்பதைப் பார்த்ததும் அவளுக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது. பரபர வென்று ஆட்டுக் கல்லை அலம்பி உளுத்தம் பருப்பை உரலில் இட்டு அரைக்க ஆரம்பித்தாள்.

சமையல் கட்டுக்கு அடுத்தாற் போல் தையல் மிஷினில்

ஏதோ தைத்துக் கொண்டிருந்த சம்பகம் திடுக்கிட்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/36&oldid=682340" இலிருந்து மீள்விக்கப்பட்டது