பக்கம்:பனித்துளி.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பனித் துளி 35

எழுந்தாள். காலைச் சமையலுக்கு அப்புறம் சமையல்கார அம்மாமி யாரோ உறவினர் வீட்டுக்குப் போக வேண்டும் என்று சொல்லிக் கொண்டு போய்விட்டது அவள் நினைவுக்கு வந்தது. பயத்துடன் சமையலறை நிலைப்படி அருகில் வந்து நின்று, ‘அம்மா! நான் அரைக்கிறேன். நீங்கள் எழுந்திருங்கள்’’ என்றாள் சம்பகம். மீனாட்சி கோபத்தால் குழவியை வேகமாகச் சுற்றத் தொடங்கினாள். சம்பகம் மேடை அருகில் சென்று கும்மட்டியைப் பற்ற வைத்து தண்ணிர் வைத்து விட்டு மறுபடியும், அம்மா! எழுந்திருக்கிறீர்களா?’ என்று விநயமாகக் கேட்டாள்.

“எழுந்திருக்க வேண்டுமா? இவ்வளவு நாழி வேலை இருக்கிறது என்று உனக்குத் தெரியவில்லையே? இப்போ தான் தெரிஞ்சுதாக்கும்!” என்று படபடவென்று கூறிக் கொண்டே உரலை விட்டு எழுந்தாள் மீனாட்சி.

சம்பகம் பதில் பேசாமல் உரல் அடியில் உட்கார்ந்து அரைக்க ஆரம்பித்தாள்.

“ஒரு நாளைக்குச் செய்ய இப்படி மூக்கால் அழுகிறீாயே, உன் புருஷன் சம்பாத்தியம் பாழாகவா போகிறது இங்கே? அவன் சம்பாதிக்க ஆரம்பித்துக் காலணா காசு கூட நாங்கள் கண்ணால் பார்க்க வில்லை. உன்னுடைய அதிர்ஷ்டம் சரி யாக இருந்தால் அவன் ஏன் இப்படிக் கண் காணாத இடத்தில் இருக்கிறான்?” என்றாள் மீனாட்சி.

காரணமில்லாமல் மாமியாரின் கோபத்துக்கு ஆளாகும் போதெல்லாம் சம்பகம் மெளனமாக இருந்து விடுவது வழக்கம். துக்கம் தாளாது அவள் எதிரில் அழ ஆரம்பித்து விட்டால் இன்னும் பல கொடுஞ் சொற்களைக் கேட்க நேரிடும் என்று, அவள் துக்கத்தை மனத்துடன் அழுத்திக் கொண்டு விடுவாள். தன்னந் தனியாகப் பேச்சுத் துணை யின்றி இருக்கும் இரவு நேரங்களில் தான் அவள் தன்னுடைய நிலையை நினைத்து அழுவாள். வானத்தில் பவனி வரும் சந்திரனும், சுடர் விடும் தாரகைகளும் அவளுடைய மனத் துயரத்தைக் கண்டிருக்கின்றன. பக்கத்தில் தூங்கும் -4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/37&oldid=682341" இலிருந்து மீள்விக்கப்பட்டது