பக்கம்:பனித்துளி.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பனித்துளி 37

அக்கறையுடன் ஒன்றும் விசாரிப்பதில்லை. வாழா வெட்டி யாக இருந்தாலும், பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் பணத் துடன் போயிருக்கும் அவளைக் கவனிக்க வேண்டிய கடமை ‘தன்னுடையது இல்லைபோல் நடந்து கொண்டான் அவன்.

“மைத்துனர் போகும்போது என்னையும் அனுப்பச் சொல்லி மாமாவைக் கேட்டேன். அவருக்கு என்னை அங்கே அனுப்ப இஷ்டமில்லை என்று சொல்லி விட்டார் அம்மா!’ என்றாள் சம்பகம். அவள் கண்களில் நீர் தேங்கி இருந்தது. இருபத்தி ஐந்து வயது கூட நிரம்பாத தான் வாழ்க்கையின் கசப்பு அவ்வளவையும் ருசித்து விட்ட வெறுப்பும் அக்கண்களில் காணப்படடது.

மாமா சொல்லுவார்! ஹாம்...அவர் ஏன் சொல்ல மாட்டார்? வளவன்குடி மிராசுதார் வீட்டுப் பெண் வந்ததே உன் அகமுடையானுக்கு அதை வேண்டாமென்று விட்டு மகாலட்சுமி மாதிரி இருக்கிறாள் பெண்’ என்று உன்னைத் தேடிப் பிடித்து வந்தாரோல்லியோ? லட்சுமீகரம் தாண்ட வம் ஆடுகிறது, உன்னாலே!” என்று கையை ஆட்டி முகத்தைச் சுளுக்கி அழகு காண்பித்தாள் மீனாட்சி.

சமையல்கட்டில் மனைவியின் குரல் உர்த்துக் கேட்கவே சர்மாவின் மத்தியானத் தூக்கம் கலைந்தது. உடனே எழுந்து சமையலறைக்கு வந்தார் சர்மா. “ஏண்டி, வர வர உன் அட்டகாசம் இந்த வீட்டில் சகிக்கமுடியவில்லை? மத்தி யான வேளையில் உன் தொண்டைதான் இந்தத் தெருவில் கேட்கிறது?’ என்று கூறிவிட்டு, குளியல் அறைக்குச் சென்றார் அவர்.

அதற்குள் உளுத்தம் பருப்பை அரைத்து எடுத்துக் கொண்டு, வாணலியில் எண்ணெயை வார்த்து அடுப்பில் வைத்து விட்டுக் காபியைக் கலப்பதில் ஈடுபட்டாள் சம்பகம். நாத்தனார். ருக்மிணி எழுந்து வந்து அதிகாரம் செய்வதற்கு முன்பே காபியைத் தயாராக வைத்து விட வேண்டும் என்கிற பயம் அவளுக்கு.

ப.-3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/39&oldid=682343" இலிருந்து மீள்விக்கப்பட்டது