பக்கம்:பனித்துளி.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 பனித்துளி

மீனாட்சி அம்மாள் என்ன தான் அதிகாரம் செலுத்து வதில் கை தேர்ந்தவளாக இருந்தாலும், சர்மாவின் வார்த்தையை மீறி அவளால் ஒன்றும் செய்ய முடிவதில்லை. சள சளவென்று ஓயாமல் சம்பகத்தை அவள் தமையனுடன் அனுப்பி விடச் சொல்லி எவ்வளவோ முறைகள் சர்மாவிடம் கூறியிருக்கிறாள் மீனாட்சி. ஆனால், அவர் அவள் துணைப்பு வதை லட்சியம் பண்ணுவதேயில்லை. அவராலும் பொறுக்க முடியாமல் போனால், அடி சீ அந்தப் பெண் இங்கே இருப்பதால் உன் மஞ்சக் காணி சொத்தா குறைந்து போகிறது? பாவம்! புருஷனைப் பிரிந்து இருக்கும் துக்கம் போதாதென்று நீ ஏன் அதை வாட்டி எடுக்கிறாய்?’ என்று ஒரு அதட்டல் போடுவார், பதிலுக்கு முனு முணுத்துக் கொண்டே போய் விடுவாள் மீனாட்சி. அன்றையப் பொழுதுக்கெல்லாம் சம்பகத்துக்குத் திட்டுகளும் இடிச் சொற்களும் பலமாகக் கிடைக்கும்.

மாமனாருக்காக அவர் மேஜை மீது காபியையும், சிற்றுண்டியையும் வைத்து விட்டு சம்பகம் உள்ளே திரும்பும் போது, வாயிற் கதவைத் திறந்து கொண்டு டாக்டர் மகாதேவன் வந்து சேர்ந்தார். வந்தவரை வரவேற்று உட்காரச் சொல்லி விட்டு சர்மா, ‘அம்மா சம்பகம்! டாக்டர் வந்திருப்பதாக உன் மாமியாரிடம் சொல்” என்று கூறினார். __

சம்பகம் சமையலறைச் குச் சென்று விஷயத்தை அறிவித்தவுட ன் சுவாமி படத்து அருகில் சுருட்டி வைக்கப் பட்டிருந்த ஜாதகத்தை அவசரமாக எடுத்தாள் மீனாட்சி. பெரிய அளவில் மதுரை ஸ்ரீ மீனாட்சி அம்பாளி படம் அது. மீனாட்சி ஜாதகத்தைச் சரேலென்று எடுத்த வேகத்தில், சுவரிலிருந்து கயிறு அறுபட்டு படம் கீழே விழுந்து, கண்ணாடி'சுக்கு நூறாக உடைந்து பூஜை அறை முழுவதும் சிதறியது

ஏண்டி! படத்தின் கயிறு சரியாக இருக்கிறதா என்று

பாக்கமாட்டாயா’ என்று கூறிக் கொண்டே ேேழ சிதறி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/40&oldid=682345" இலிருந்து மீள்விக்கப்பட்டது