பக்கம்:பனித்துளி.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 பனித்துளி

‘வருகிற இடத்திலுமா ஊத வேண்டும் சுருட்டை” என்று தன் அருவருப்பை முகத்தைச் சுளித்து அறிவித்துக் கொண்டாள் மீனாட்சி.

“நாற்றம் சகிக்கவில்லை!” என்று உதட்டை மடக்கித் தன் அபிப்பிராயத்தைக் கூறிவிட்டு ருக்மிணி, அன்று மாலை பெண் பார்ப்பதற்காகத் தன்னை அலங்காரம் செய்து கொள்வதில் முனைந்தாள். -

‘ஏன்னா! நீங்களும் வருகிறீர்களா எங்களோடு?’ என்று சர்மாவைக் கொஞ்சியவாறு கேட்டாள் மீனாட்சி. நாணிக் குழைந்து அவள் கேட்ட மாதிரியிலிருந்து அவளே ஒரு கல்யாணப் பெண்ணைப் போல் இருந்தாள் என்று சொல்லலாம். ---

சர்மா சாய்வு நாற்காலியில் நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டார். பிறகு தொண்டையைக் கனைத்துக் கொண்டு, ‘மீனு! எந்தக் காரியத்தையும் செய்வதற்கு முன்பு நன்றாக யோசனை செய்ய வேண்டும். டாக்டரின் பெண்ணை நான் இரண்டு மூன்று தடவைகள் பார்த்திருக்கிறேன். பெண் ரொம்பவும் நாகரிகமாக இருப்பாள். மாமியார், மாமனார் எதிரில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்றெல்லாம் அவளுக்குத் தெரியாது. காபி அவள் இருக்கும் இடத்துக்குத்தான் அனுப்ப வேண்டும் சம்பகம் மாதிரி நீ சொல்வதை யெல்லாம் கேட்டுச் சகித்துக் கொண்டிருக்க மாட்டாள். நாளைக்குக் கல்யாணம் நடந்த பிறகு எந்தவித மனஸ்தாபங்களுக்கும் இடமில்லாமல் நடந்து கொள்ள வேண்டும். பெண் என்னவோ நன்றாகப் படித்திருக்கிறாள். லட்சணமாகவும் இருக்கிறாள்’ என்றார்.

சர்மா த அபிப்பிரயத்தைக் கூறிவிட்டு மறுபடியும் நாற்காலியில் சாய்ந்து கொண்டு தினசரி படிப்பதில் முனைந்தார்.

‘அவளை நான் என்ன சொல்லக் கிட க்கிறது? அவ்வளவு விவேகம் இல்லையா எனக்கு?’ என்று மனத் தாங்கதுடன் கேட்டாள் மீனாட்சி தன் கணவனைப் பார்த்து.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/42&oldid=682347" இலிருந்து மீள்விக்கப்பட்டது