பக்கம்:பனித்துளி.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பனித்துளி 41

மணி ஐந்துக்கு டாக்டர் மகாதேவன் வீட்டிற்கு வருவதாகத் தெரிவித் திருந்ததால் மீனாட்சி பேச்சை அதிகம் வளர்த்தாமல் இருந்து விட்டாள். பெண்ணும், தாயாரும் உடுத்திக் கொண்டு புறப்பட்டார்கள். ருக்மணி பள பள வென்று ஜ்வலிக்கும் வைர நெக்லெஸை அணிந்து கொண்டாள். ‘உப்'பென்று பருத்திருந்த கழுத்தில் புதையப் புதைய இருந்தது அட்டிகை. மீனாட்சி அம்மாள் கெம்பு அட்டிகையையும், கெம்பு வளையல்களையும் அணிந்து அரக்குப் புடவை உடுத்திக் கொண்டு புறப்பட்ட போது சர்மா லேசாகச் சிரித்து, இன்றைக்கு அம்பாளுக்கு ரத்தினச் சேவை போலிருக்கிறது!’ என்று அவளைப் பரிகசித்தார்.

இருவரும் காரில் புறப்பட்டுச் சென்ற பிறகு, சர்மா பின் கட்டு கூடத்துக் கதவு அருகில் நின்று கொண்டிருந்த சம்பகத்தைப் பார்த்தார். சாதாரண நூல் சேலை உடுத்திக் கழுத்தில் பளிச்சென்று ஒளிரும் மாங்கல்யச் சரடுடன், ஒரு மெல்லிய தங்கச் சங்கிலியும் கைகளில் மெல்லிய இரண்டு தங்க வளையல்களும் அணிந்து, நெற்றியில் பளிச்சிடும் குங்குமப் பொட்டுடன் நிற்கும் சம்பகம் எளிமைக்கு எடுத்துக்காட்டாக இருந்தாள். -

“நீயும் போய்விட்டு வருவது தானே அம்மா?” என்று கேட்டார் சர்மா, நாட்டுப் பெண்ணைப் பார்த்து.

‘வீட்டிலே சமையல்கார மாமி இல்லை. இரவுதான் வருவாள். எல்லோரும் போய் விட்டால் எப்படி?’ என்று விநயமாகக் கூறினாள் சம்பகம். |

சமையல்காரி இருக்கும் நாட்களில்கூட சம்பகம் சிறையில் அடைபட்ட சீதா தேவியைப் போல் வெளியில் எங்கும் ‘போகாமல் இருப்பது சர்மாவுக்குத் தெரியும். கணவன் செய்த குற்றத்துக்காக அவள் மனம் வருந்தி துன்ப வாழ்க்கை நடத்துவதும் அவருக்குத் தெரிந்த விஷயம்தான். சமையல்காரிக்கு உதவியாக வேலைகள் செய்தது போக எஞ்சி இருக்கும் நேரத்தைக் குடும்பத்துக்கு வேண்டிய துணிமணிகள் தைப்பதில் கழிப்பாள் சம்பகம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/43&oldid=682348" இலிருந்து மீள்விக்கப்பட்டது