பக்கம்:பனித்துளி.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பணித்துளி 45

நாற்பத்து மூன்று வயசுக்காரனை மணந்து கொள்வதா? பதினாறு வயசில் தனக்கு ஒரு பெண் இருக்கும் போது பதினெட்டு வயசு மங்கை ஒருத்தியை மனைவியாக ஏற்றுக் கொள்ள முத்தையாவின் மனம் ஒப்புகிறது. கடிதம் எழுதவும் துரண்டுகிறது!

அங்கு நிலவி இருக்கும் மெளனத்தை மீறிக் கொண்டு, ‘பொழுது விடிந்து அஸ்தமிப்பதற்குள் நூறு தடவை ‘அம்மா மி என்னைத் துணப்பி எடுக்கிறாள் அப்பா! பெண் ணு க் கு வயசாகி வருகிறதே என்கிற விசாரம் அவளுக்கு. ஆனால், கா மு ைவ மூன்றாந்தாரமாகக் கொடுப்பதற்கு எனக்கு இஷ்டமில்லை” என்றார் ராமபத்திர அய்யர்.

“இந்தக் கடிதத்துக்குப் பதில் எழுதி விட்டீர்களா?” என்று சிறிது பதட்டத்துடன் கேட்டான் சங்கரன்.

“ஆமாம். அவன் ஒரு மனுஷன் என்று மதித்து பதில் வேறு எழுத வேண்டுமா என்ன?’ என்றார் அவர். -

“எனக்கும் இன்று தபாலில் ஊரிலிருந்து அம்மா கடிதம் எழுதி இருக்கிறாள். எனக்குக் க ல் யா ண ம் நிச்சயம் பண்ணுவதற்கு ஒரே அவசரம் அவளுக்கு. பெண் ஏற்கெனவே தெரிந்த இடம். காலேஜிலே படிக்கிறாள். நான் கூட இரண்டொரு தடவைகள் பார்த்திருக்கிறேன். காமுவைப் போல் இருக்கமாட்டாள். சுமாரான அழகி தான்’ என்றான் சங்கரன்.

‘இஷ்டமிருந்தால் உன் சம்மதத்தை எழுதி விடேன் அப்பா சுபஸ்ய சிக்கிரம்’ என்பார்கள். சங்கரா நான் என்னவோ காமுவைப் பாழுங் கிணற்றில் தள்ளுகிற மாதிரி முத்தையாவுக்குக் கொடுக்கப் போவதில்லை. இன்னும் இரண்டொரு வருஷங்கள் ஆனாலும் பாதகமில்லை. பட்டினத்தில் உனக்குத்தெரிந்தவர்கள் எவ்வளவோ பேர்கள் இருப்பார்கள். ஐம்பது ரூபாய் சம்பாதித்தாலும் பாதக மில்லை, பையன் யோக்கியனாகவும், குணவானாகவும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/47&oldid=682352" இலிருந்து மீள்விக்கப்பட்டது