பக்கம்:பனித்துளி.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 பணித்துளி

இருக்க வேண்டும். ஏதாவது பார்த்து ஏற்பாடு செய்வாய் என்கிற நம்பிக்கையுடன்தான் உன்னிடம் சொல்லுகிறேன்.” சங்கரனின் மனம் துடித்தது, ‘நான் இப்பொழுது கல்யாணம் செய்து கொள்ளும் உத்தேசமே இல்லை. அப்படிச் செய்து கொண்டால் காமுவையே பண்ணிக் கொண்டு விடுகிறேன்!” என்று கூறிவிட்டு நகைத்தான்.

பிச்சைக்காரன் ஒருவனுக்கு முழு வெள்ளி ரூபாய் கிடைத்த மாதிரியும், பஞ்சத்தில் வாடுபவனுக்குப் பால் அன்னம் கிடைத்த மாதிரியும் இருந்தது சங்கரன் கூறிய வார்த்தைகள் ராமபத்திர அய்யருக்கு.

‘சங்கரா இதெல்லாம் என்ன பேச்சப்பா? உன் அந்தஸ்து என்ன? உன் தகப்பனாரும் நானும் நண்பர்களாக இருந்தாலும் ஸ்ரீகிருஷ்ணனும், சுதாமனும் போல் அல்லவா எங்களுக்குள் வித்தியாசம் ஏற்பட்டிருக்கிறது?’ என்றார் அவர், உணர்ச்சியுடன். அவர் தொண்டை கரகரத்தது.

‘அதனால் என்ன, மாமா? ஸ்ரீபரமாத்மா மனது வைத்ததும் சுதாமனை குபேரனுக்குச் சமமாகச் செய்துவிட வில்லையா? எங்களிடம்தான் பணம் இ ரு க் கி ற தே! இன்னொருவர் கொடுத்து எங்களுக்கு ஆக வேண்டியது ஒன்றுமில்லையே?’ என்றான் சங்கரன்.

‘உனக்கு உலகம் தெரியவில்லை அப்பா. பணம் பணத்துடன்தான் சேரும். காமுவுக்கு ஏதாவது சுமாரான இடமாகப் பார்த்துச் சொன்னாயானால் போதும் அப்பா!’ என்றார் அவர். *

‘காமுவைக் கல்யாணம் செய்து கொள்ள எனக்கு இஷ்டமிருக்கிறது. அவள் சம்மதத்தைக் கேட்டுச் சொல்லி விடுங்கள், மாமா! மற்ற ஏற்பாடுகளை நான் அப்பா மூலமாய்ச் செய்து கொள்ளுகிறேன்” என்றான் சங்கரன்.

கொல்லையில் மாட்டுக்குத் தீனி வைத்து முடித்து விட்டுக் காமு உள்ளே வந்தாள். சங்கரன் கூறிய வார்த்தைகள் கணிரென்று அவள் காதுகளில் விழுந்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/48&oldid=682353" இலிருந்து மீள்விக்கப்பட்டது