பக்கம்:பனித்துளி.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பணித்துளி 57

பலதர்ப்பட்ட கேள்விகள் ராமபத்திரய்யரின் மனத்தைக் குழப்பி, அவர் தலையைக் கிறுக்க வைத்தன.

‘அம்மா காமு! நான் கொஞ்சம் கழனி வரைக்கும் போய்விட்டு வருகிறேன்’ என்று கூறிவிட்டு, மனைவி கேட்ட கேள்விக்குப் பதில் ஒன்றும் கூறாமல் கொல்லைப் பக்கமாகக் கழனி வெளியை நோக்கிப் போனார், ராமபத்திர அய்யர்.

“நான் எதற்கு வரட்டுத் தவளை மாதிரி கத்த வேண்டும்? அததன் தலையெழுத்துப்படி நடக்கிறது! கோபு அகத்தில் அப்பளம் இடக் கூப்பிட்டார்கள் என்னை, போய்விட்டு வருகிறேன் காமு’ என்று கூறிவிட்டு, விசாலாட்சியும் கிளம்பி விட்டாள்.

தனியாக விடப்பட்ட காமுவின் மனம் தாமரை இலைத் தண்ணிர் மாதிரி தத்தளித்தது.

“என்னுடைய சம்மதம் ஒன்றுதானே கேட்டார் அவர்? வேறு சீர் சிறப்புகளைப் பற்றி லட்சியம் செய்பவராகவே காணோமே?” என்று பல விதமாக நினைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள் காமு. மணி ஜோஸ்யர் அடிக்கடி தன் தந்தையிடம் அவள் ஒரு அதிர்ஷ்டக்காரி என்று கூறி வருவதை நினைத்துப் பார்த்தது அவள் மனம். அந்த அதிர்ஷ்டம் இதுதானோ என்றும் நினைத்தாள் காமு.

எந்த நிமிஷத் தில் யாரைத்தேடி ரீ மகாலட்சுமியின் ஆடாட்சம் ஏற்படுகிறது என்பது யாராலும் அறிய முடியாத விஷயம் அல்லவா? காமுவின் அதிர்ஷ்டத்தால் அவளும்: அவள் குடும்பமும் உயர வேண்டும் என்று இருந்தால் அப்படி நடந்தே தீரும். கடவுளின் கருணை இருந்தால் எது வேண்டு மானாலும் நடக்க முடியும் என்று அவள் தந்தை தீர்மானித்து இருந்தபடியே காமுவும் தீர்மானித்துக்

கொண்டாள்.

+ Ho -

மீனாட்சி அம்மாளும், ருக்மிணியும் பெண் பார்த்து

விட்டு வந்த பத்து தினங்களுக்கு அப்புறம் ஒரு தினம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/59&oldid=682365" இலிருந்து மீள்விக்கப்பட்டது