பக்கம்:பனித்துளி.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 பனித்துளி

திடீரென்று பள்ளிக்கூடத்திலிருந்து வந்த பானுவுக்கு லேசாக ஜூரமும், இருமலும் ஆரம்பித்தன. சம்பகம் முதலில் அதை அவ்வளவாகப் பாராட்டாமல் கஷாயம்

வைத்துக் குழந்தைக்குக் கொடுத்தாள். i.

அந்த வீட்டில் எடுத்ததற்கெல்லாம் ஒயாமல்

ருக்மிணியும், அவள் குழந்தைகளும் மருந்து சாப்பிடுவார்கள். பொழுது விடிந்தால் அரை பாக்கெட் பிஸ்கோத்துகளைக் கொடுத்துவிட்டுக் குழந்தை சரிவரச் சாப்பிடுவதில்லை என்று சொல்லிக் கொண்டு டாக்டரிடம் இழுத்துக்கொண்டு ஒடுவாள் ருக்மிணி அவர் தன் மனத்துக்குள் சிரித்துக் கொண்டே ஏதாவது மருந்தைக் கொடுத்து அனுப்புவார். ஒயாமல் பசியால் வாடும் ஏழை மக்களின் குழந்தைகளுக்கு ஒரு பிடி அன்னம் கொடுக்க மறுக்கும் உள்ளம், வெள்ளித் தட்டில் தயிர் விட்டுப் பிசைந்த சாதத்தைக் கூசாமல் நாய்க்குப் போடத் தயங்குவதில்லை.

பானுவுக்கு உடம்புக்கு வந்தால் முதலில் அதைப்பற்றி அவள் தாத்தா சர்மாவிடம் யாரும் சொல்லிவிடக் கூடாது என்பது மீனாட்சி அம்மாளின் தடை உத்தரவு! ‘தண்டத்திற்குப் பணம் செலவழித்துப் பிள்ளையின் குழந்தைக்கு வைத்தியம் பார்க்கக் குழந்தையின் தகப்பன் ஒன்றும் சம்பாதித்துப் புரட்டவில்லை என்பது அவள் தீர்மானம். சுக்கும், மிளகும்தான் பானுவின் ஒளவுதங்கள்.

அந்த வீட்டிலேயே பானுவிடம் அன்புடன் இருப்பவர் சர்மா ஒருவர்தான். ஆகவே, அவருடைய அன்பையும் அந்தக் குழந்தை அடைவதில் மீனாட்சி அம்மாளுக்கு விருப்ப மில்லை. H

குழந்தைக்குக் கஷாயம் கொடுத்துப் போர்த்திப் படுக்க வைத்து விட்டுத் தன் அலுவலைக் கவனிக்க ஆரம்பித்தாள் சம்பகம். சங்கரன் காரியாலயத்திலிருந்து வந்ததும் பானுவிடம் சிறிது நேரம் பேசுவான். அவன் அவ்விதம் குழந்தையிடம் சலுகை காட்டுவதும் மீனாட்சிக்குப் பிடிக்க வில்லை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/60&oldid=682367" இலிருந்து மீள்விக்கப்பட்டது