பக்கம்:பனித்துளி.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பனித்துளி 65

அதற்குப் பிறகு நாலைந்து தினங்கள் கழித்து சம்பகம் மாமனாரிடம், தான் ஊருக்குப் போய் வருவதாக உத்தரவு கேட்டாள். -i.

‘உனக்கு இந்த வீட்டில் என்ன கஷ்டமிருந்தாலும் கொஞ்ச நாளைக்குப் பொறுத்துக் கொண்டிருக்கக் கூடாதா அம்மா?’ என்று சர்மா கேட்டார் நாட்டுப் பெண்ணிடம்.

‘இல்லை மாமா! குழந்தைக்கும் இடம் மாறுதல் ஏற்பட்டால் நல்லது. கொஞ்ச நாளைக்கு என் தமையன் வீட்டில் இருந்து விட்டுத்தான் வருகிறேனே?’ என்று அவள் வற்புறுத்தவும் சர்மா அவளை ஊருக்கு அனுப்பி வைக்க இசைந்தார்.

பானுவையும், சம்பகத்தையும் ரயிலேற்றி விடச் சென்றிருந்த சடிகரன் அவளிடம், ‘மதனி! என்னவோ அம்மாவின் திருப்திக்காக இந்தக் கல்யாணம் நடக்கிறது. நீங்களும் இல்லாமல் போகிறீர்களே?” என்று கேட்டான் மனத்தாங்கலுடன்.

சம்பகம் பெருமூச்சு விட்டாள்.

“ஒருவருக்காக உங்கள் வாழ்க்கையைப் பாழாக்கிக் கொள்ளாதீர்கள். நான் இரு த் து என்ன ஆகவேண்டும்? ஆசையுடன் என்னை யாராவது இருக்கும் படி கூறினார் σcηπ” கொஞ்ச காலம் கண் மறைவாகத் தான் இருந்து விட்டு, வருகிறேனே’ என்று கூறிவிட்டு கண்ணில் ததும்பும் நீரை முந்தா னயால் துடைத்துக் கொண்டாள்.

சங்கரனுக்கு வேதனை தாங்கவில்லை. அக்னி சாட்சி யாகக் கைப்பிடித்த மனைவியை மறந்து வாழத் தன் தமையனால் முடிந்த போது.அவனை மறந்து வாழ சம்பகத் தால் முடியவிலை காமுவை மறந்து இன்னெருத்தியைத் தான் மணந்து கொண்டாலும், காமு தன்னை மறந்து விட மாட்டாள். தான் மறக்கலாம், அவள் மறக்கக் கூடாது. இது என்ன சுயநலம்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/67&oldid=682374" இலிருந்து மீள்விக்கப்பட்டது