பக்கம்:பனித்துளி.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 பனித்துளி

சங்கரன் கேவலம் பணத்தின் முன்பு கோழையாக மாறி விட்டான். ஆயிரம் மனக் கோட்டைகள் கட்டிக் கொண் டிருக்கும் காமுவை ஒரு நொடியில் அவனால் உதற

முடிந்தது. ---

“ரயில், வண்டி கூ’ என்று கத்திக் கொண்டு புறப் பட்டது. பானு,வியாதியால்மெலிந்து போன தன் பிஞ்சுக்கை களை ஜன்னலுக்கு வெளியே நீட்டி சித்தப்பாவுக்குக்'டாடா காட்டினாள்.

o

5. சம்பகம் திரும்பினாள்!

பொன்மணி கிராமத்தின் தெருக்கோடியில் தபால் காரனின் தலையைக் கண்டதும் காம உள்ளம் பதைக்கக் கொல்லைக் கிணற்றங் கரையில் நின்று அவன் அவர்கள் வீட்டிற்கு ஏதாவது தபால் கொண்டு வருகிறானா ன்ன்று பார்த்துக் கொண்டிருப்பாள். அடுத்த வினாடி அவள் மனக்கண் முன்பு முத்துப் போன்ற எழுத்துக்களில் சங்கரன், “அப்பாவும், அம்மாவும் நான் காமுவைக் கல்யாணம் செய்து கொள்வதைப் பற்றி ஆட்சேபணை கூறவில்லை. கூடிய சீக்கிரம் உங்கள் செளகரியம் போல் முகூர்த்தம் வைத்துக் கொள்ளலாம்” என்று எழுதிய கடிதம் ஒன்று திரைப் படம்போல் தோன்றும். ஒன்றுமில்லாத ஏழைப் பெண்ணை மனம் உவந்து ஏற்றுக்கொள்ளும் அந்தப் பெரியோர்களுக்குத் தன் சரீரத்தைச் செருப்பாகத் தைத்துப் போட்டாலும் ஈடாகாது என்று நினைத்துக் கொள்வாள்

காமு, _ •

ராமபத்திரய்யரும் தினம் சங்கரன்ரிடமிருந்து கடிதத்தை எதிர்பார்த்துக் கொண்டுதான் இருந்தார். சங்கரனின் மெளனத்துக்குக் காரணம் விளங்காமல் அவர் திகைத்துக் கொண்டிருந்தபோது, தபால்காரன் சாவகாசமாக இரண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/68&oldid=682375" இலிருந்து மீள்விக்கப்பட்டது