பக்கம்:பனித்துளி.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 பனித்துளி

ஒரு தினம் ராஜம்பேட்டைக்குப் போய் வந்த ராமபத்திரய்யர் சங்கரனுக்கு அவன் மாமனார் செய்த சீர் வரிசைகளைப் பற்றி யாரோ கூறியதை வீட்டில் வந்து சொன்னார். தங்கத்தில் பஞ்ச பாத்திரமும், உத்தரணியும் செய்தார்களாம். பாத்திரமும், பண்டமும் கடை மாதிரியே இருந்ததாம்” என்று கூறிப் பெருமூச்சு விட்டார் அவர்.

“கல்யாணமும் அமர்க்களமாகத்தான் நடந்திருக்கும்’ என்று விசாலாட்சி அபிப்பிராயப் பட்டாள். --- “ஆமாம், இரண்டு பக்கத்திலும் பணம் குவிந்து கிடக்கிறது. அமர்க்களத்துக்குக் கேட்பானேன்?” என்று தன்னையே தேற்றிக் கொண்டார் ராமபத்திரய்யர். என்னதான் அவர் தன் மனசுக்கே ஆறுதல் அளித்துக் கொண்டாலும் ஏமாற்றம் அவர் கண்களிலும் பேச்சுக் களிலும் தோன்றிக் கொண்டு தான் இருந்தன.

பெண் ரொம்ப நாகரிகமாம். ரிஸப்ஷன்’ போது “பஞ்சாபி உடையில் தான் உட்காருவேன்’ என்று அப்படியே உடை அணிந்து உட்கார்ந்தும் விட்டாளாம்! நடேசன் மனைவியைப் பற்றித்தான் உனக்குத் தெரியுமே! ராத்திரி சாப்பிட வர மாட்டேன் என்று ரகளை பண்ணி விட்டாளாம்!” என்றார் அய்யர்.

பணக்கார வீட்டுக் கல்யாணங்களிலும் சம்பந்திச் சண்டை இருக்கிறது. பணமில்லை, சீர் இல்லை, பாத்திர மில்லை, காபி நன்றாக இல்லை என்கிற காரணம் அங்கே இல்லாவிட்டாலும் சண்டைக்கென்று வேறு காரணம் ஏதாவது அவர்களுக்கு அகப்படும்” என்று காமு நினைத்துக் கொண்டாள், தகப்பனார் கூறுவதை யெல்லாம் கேட்டுக் கொண்டிருந்து விட்டு.
மூத்த நாட்டுப் பெண்ணை அவள் ஆட்டி வைக்கிற ஆட்டத்துக்கு இந்த மாதிரிப் பெண்தான் சரி. நான் முத்தையா கல்யாணத்துக்குப் போய் இருந்தேனே, அங்கே பார்த்தேன் அந்தப் பெண் சம்பகத்தை! ஏண்டி! நீ மீனாட்சி நாட்டுப் பெண் சம்பகம் தானே? உன் கொழுந்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/72&oldid=682380" இலிருந்து மீள்விக்கப்பட்டது