பக்கம்:பனித்துளி.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பணிந்துளி 71

அறுக்குக் கல்யாணமாமே? நீ எங்கேடி வநதாய், கல்யாணத்துக்கு இல்லாமல்?’ என்று கேட்டேன் அவளை. ான்ன தான் பொறுமைசாவியாக இருந்தாலும் கஷ்டத்தை எத்தனை நாளைக்கு மனசிலேயே வைத்துப் பூட்டிவைக்க முடியும்? பாவம், அவள் குழந்தை செத்துப் பிழைத்ததாம்.’ அதற்கு வியாதி வந்திருந்த போது யாருமே கவனிக்க வில்லையாம். நாளைக்கு இரண்டு தடவைகளாவது பிறந்த வீட்டுக்குப் போவது தானே என்று மீனாட்சி எரிந்து விழுந்து கொண்டிருந்தாளாம். நடேசன் சமாசாரம் தான் உங்களுக்குத் தெரியுமே. எருமை மர்ட்டின் முதுகில் மழை பெய்கிற மாதிரி எதையும் லட்சியம் பண்ணமாட்டார்.அவர் .ெ கா ளு ந் த னி ன் கல்யாணத்துக்குக் கூட இராமல் குழந்தையை அழைத்துக் கொண்டு தமையன் வீட்டிற்கு வந்திருக்கிறது அந்தப் பெண்’ என்றாள் விசாலாட்சி.

காமு, சுவாமி விளக்கைத் துடைத்துத் திரியிட்டு எண்ணெய் ஊற்றிக் கொண்டே இதைக் கேட்டுக் கொண்

டிருந்தாள். ‘சங்கரன் படித்தவராக இருந்தாலும், படித்தவர் என்று பெருமையாகக் காட்டிக் கொள்ள மாட்டார். நம் .ெ த ன் னி ந் தி யக் கலாசாரங்களில் பற்றுடையவர். நீலா அவள் எப்படி இருப்பாளோ?

பஞ்சாபி உடையாமே? கிள்ளுக் கிள்ளாய்க் கொசுவம் வைத்துக் கண்ணைப் பறிக்கும் ரகங்களில் புடவைகள் வாங்கிக் கட்டிக் கொண்டால் அழகாக இராதா?’ என்று காமு நினைத்துக் கொண்டாள். o -

ராமபத்திரய்யரின் காதில் விசாலாட்சி சொன்னவை விழுந்ததாகத் தெரியவில்லை. சரிக்குச் சரியான சம்பந்தம் வேண்டும் என்றுதானே, அதில் உள்ள குறைகளைக் கூடப் பாராட்டாமல் கல்யாணம் பண்ணிக் கொண்டிருக்கிறார் கள்? தங்கப். பதுமை மாதிரி நிற்கும் காமுவைத் திரஸ்கரித்த தற்கும் இந்த அந்தஸ்தின் ஏற்றத் தாழ்வு மனப்பான்மை தானே காரணம்? ராமபத்திரய்யர் ஏற்கெனவே ஏழைதர்ன். இன்றும் ஏழையாகத்தான் இருக்கிறார். ஆனால், குருடனை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/73&oldid=682381" இலிருந்து மீள்விக்கப்பட்டது