பக்கம்:பனித்துளி.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

‘'நீ குருடன், நீ குருடன்’ என்று கத்தினால் அவன் மனம் எவ்வளவு புண்படும்? அது போலவே சங்கரன் காமுவைத் தி ர ஸ் க ரி த் து நீலாவை ம ண ந் து கொண்டது ராமபத்திரய்யரை, “நீ த ரி த் தி ர ன், நீ ஏழை” என்று யாரோ ஏசுவதுபோல் அவருக்குத் தோன்றியது. மனத்தில் எழும் உணர்ச்சிகளை வாய் விட்டுக் கூறாமல்சுவாமி படத்து அருகில் தீபம் ஏற்றி விட்டு உட்கார்ந்து, “சியாமளா தண்டகம்’ படிக்கும் பெண்ணை “காமு!’ என்று கூப்பிட்டார் உருக்கமாக,

‘ஏன் அப்பா?’ என்று ஆதுரத்துடன் கேட்டாள் காமு தகப்பனாரைப் பார்த்து. *

“காமு! சங்கரன் உன்னை ஏமாற்றியதற்கு நீ வருத்தப் படவில்லையா அம்மா? உனக்கு அது வருத்தமாக இல்லையா?’ என்று கேட்டார் அவர். விசாலாட்சி அப்பொழுது அங்கு இல்லை. உள்ளே சமையலறையில் வேலையாக இருந்தாள்.

“நான் எதற்காக அப்பா வருத்தப்பட வேண்டும்? என்னவோ வாய்ப்பேச்சாகச் சொல்லி விட்டுப் போனார். நாம்தான் அதை நிஜம் என்று நம்பிவிட்டோம்” என்றாள் மலர்ந்த முகத்துடன் காமு.

ஆனால், ராமபத்திரய்யரின் மனதுக்குச் சாந்தி கிடைக்கவில்லை இந்த ஏமாற்றமும் அவருக்குப் பெரிய அதிர்ச்சியைக் கொடுத்தது. அன்றிலிருந்து அவர் சித்தப் பிரமை பிடித்தவர் மாதிரி தமக்குத் தாமே பேசிக் கொள்வதும், சிரிப்பதும் வழக்கமாகி விட்டது.

கல்யாணம் முடிந்த பிறகு மூன்று மாதங்கள் வரையில் நீலா புக்ககம் வரவில்லை. காலேஜில் சேர வேண்டும் என்று தகப்பனாரிடம் கேட்டுப் பார்த்தாள். “இனிமேல் உன் புருஷன் வீட்டு மனுஷர்கள் சொல்லுகிற மாதிரிதான் கேட்க வேண்டும்’ என்று கூறி விட்டார் அவர். மாலை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/74&oldid=682382" இலிருந்து மீள்விக்கப்பட்டது