பக்கம்:பனித்துளி.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பணித்துளி 91

அவள் மனத்திற்குத் தோன்றாவிட்டாலும், மாமியாரிடம் அவள் நடந்து கொள்ளும் முறை சம்பகத்தின் மனப் புண்ணைச் சிறிது ஆற்றியது. ஒன்றும் அறியாத தன்னை அவர்கள் கண்ணில் விரலைக் கொடுத்து ஆட்டும்போது, அவர்களை ஆட்டிப்படைக்க ஒருத்தி வந்திருப்பது அவளுக்கு ஒரு விதத்தில் திருப்தியாகத்தான் இருந்தது.

எவ்வளவு தான் பொறுமையை வகிப்பவளானாலும் அவளும் கோய தாபம், அன்பு, ஹிம்சை முதலிய உணர்ச்சி களுக்குக் கட்டுப்பட்டு நடப்பவள்தானே? அவள் இருதயம் மனிதப் பண்பை உடையதுதான். தன் விடிவு காலத்தை எதிர்பார்த்து அந்த வீட்டில் அவள் இருந்து வருகிறாளே தவிர. மாமியாருக்கு அடிமையாக இருப்பதற்கு அல்ல.

சமையற்கட்டிலிருந்தபடி பெரியவர்கள் மூவருக்கு மிடையே நடந்த பேச்சைக் கவனித்தாள் சம்பகம். அவள் மனம் மீனாட்சி அம்மாளுக்காக இரங்கவில்லை. தன் சுகத்திலேயே நாட்டமுடைய ருக்மிணிக்காகவும் இரங்க வில்லை. நீலாவுக்காகவும் அவள் மனம் பச்சாதாபப்பட வில்லை. பிறர் துன்பம் கண்டு மனம் இரங்கும் தன் கொழுந்தன் சங்கரனுக்காகவே அவள் மனம் இரங்கினாள். ‘மதனி” என்று அன்புடன் மரியாதைசெலுத்தும் சங்கரனின் சரளமான சுபாவம் அவள் மனத்தைக் கலக்கி அவள் கண் களில் கண்ணிரை வரவழைத்தது.

காமுவன தகபபனாரும், யாருடைய உதவியுமின்றி அந்தப் பெரிய நகரத்தில் ஊரில் விற்ற வீட்டின் பணத்தை வைத்துக்கொண்டு ஒரு சிறிய மளிகைக்கடை ஆரம்பித்தார். சங்கரன் அவரை ஏமாற்றிய பிறகு வாழ்க்கையில் எவரை யுமே நம்பக்கூடாது என்கிற தீர்மானத் கடன் கடனுக்காகச் சாமான்கள் கெ டு .க மல் ந மு. ஸ்ளவர்களை வாடிக்கைக்காரர்களாக வைத்துக் கொண்டு வியாபாரம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/93&oldid=682403" இலிருந்து மீள்விக்கப்பட்டது