பக்கம்:பனித்துளி.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 பனித்துளி

செய்தார். செல்வம் அபரிமிதமாகப் பெருகாவிட்டாலும் வறுமை அவர்களை விட்டுப் போய் விட்டது.

காமுவும் கிராமத்தில் கல்யாணத்தை எதிர்பார்த்து எட்டாவது வகுப்புடன் படிப்பை நிறுத்திக் கொண்டவள். மறுபடியும் பள்ளியில் சேர்ந்து படிக்க ஆரம்பித்தாள். ஒழிந்த வேளைகளில் தையல் வகுப்பில் சேர்ந்து துணிகள் தைப்பதற்குப் பழகிக் கொண்டாள். கல்யாணம் வாழ்க்கைக்கு அவசியம் தான் என்றாலும் கல்யாணம் செய்து கொண்டால்தான் வாழ முடியும் என்கிற எண்ணம் அவள் மனத்தை விட்டு அகன்று விட்டது.

ரயிலில் சந்தித்த பெண்மணியின் விலாசத்தைத் தேடிக் கொண்டு அவள் வீட்டிற்குப் போனாள் காமு. அழகிய சிறு தோட்டத்தின் நடுவில் சிறிய வீட்டில் அந்தப் பெண்மணி யும் அவள் கணவனும் வசித்து வந்தார்கள். வீடு சிறியதே தவிர அங்கு அன்பும் ஒற்றுமையும் நிலவி இருந்தன. பணத் தின் ஆடம்பரம் இல்லாமல் rைத்துக்கு அடிமை ஆகாமல் பணத்தைக் கொண்டு வாழ்வை வளமுள்ள தாக்கிக்கொள்ள முடியும் என்பதை அத்தம்பதி உணர்த்தினர்.

அவர்கள் வீட்டுக் கூடத்தில் அன்பே உருவான புத்தரும், அஹிம்சை அண்ணல் காந்தி அடிகளும் மேஜைமீது வீற்றிருந்தனர். அறிவை வளர்க்கும் புஸ்தகங்கள் நிரம்பிய அலமாரி ஒரு புறம் வைக்கப்பட்டிருந்தது. உலகத்தைத் தன் ஆட்டத்தால் ஆட்டி ஊக்குவிக்கும் இறைவன் நடராஜனின் திரு உருவப்படம் மாட்டப்பட்டு, அதன் அருகில் நந்தா விளக்கும், அதில் புகையும் ஏற்றி வைக்கப்பட்டிருந்தது. கூடத்துக்கே ஒரு தேஜஸை அளித்தது.

உள்ளே நுழைந்தபோது காமு கூடத்தின் அலங்காரத் தைப் பார்த்து வியந்து சிறிது நேரம் நின்றாள். சமையல் அறையில் கணவனுக்கு உபசரித்து உணவு பறிமாறும் தன் சிநேகிதியின் இனின்மய்ான குரல் காதில் ஒலித்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/94&oldid=682404" இலிருந்து மீள்விக்கப்பட்டது