பக்கம்:பன்னிருபாட்டியல்-மூலம் மட்டும்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 சூடாமணி, உரிச்சொல். கயாகரம், அகராதி, ஆசிரியம் முதலியன. இந் நிகண்டுகளெல்லாம் தமிழ்மொழியுணர்ச்சிக்கு இன்றியமை. யாதனவாக முன்பிருந்தனவாயினும், அகராதிகள் வெளிவரவே, இவற்றின் பயிற்சி நின்று வருகின்றது. ஏனெனில், அவ்வகராதி. பிரதியொன்று பக்கத்துக் கிடக்குமாயின் பதப் பொருள்களையெல்லாம் மனனம் பண்ணியதுபோலவே அஃது உதவுவதாகின்றது. ஆகவே, இன்னுஞ் சிலகாலத்துள் நிகண்டுகள் பழைமை பெருமை பற்றி மட்டும் போற்றற்குரிய நூல்களாய், முற்றும் வழக்கு ஒழிந்து விடுமென்றே தோன்றுகிறது. இது பெரிதும் இசங்கத்தக்க சம்பவங்களுள் ஒன்றே. க. திவாகரம் தமிழில் வழங்கும் நிகண்டுகள், அவ்வக் காலத்து வழக்குக%ளத் தழுவித் தக்கவர்களாற் செய்யப்பட்டன. இவற்றுள் திவாகரமே முன்னது. இதிற் சங்கத்துச் சான்ருேர் வழக்குகள் மிகுதியாம். பிங்கலந்தை அதனினும் பிற்பட்டது; பிற சான்ருேர் வழக்குகளை இதிற் கானலாம். ஏனைய நிகண்டுகளில் பிற்கால வழக்குகள் பயிலும், இவற்றையெல்லாம் விளக்குவதற்கு இஃது இடமில்லையாயினும், நிகண்டுகளைப்பற்றித் தனித்தனியே பேசும்போது முக்கியமான: வற்றைக் குறித்து எழுதப்படும். இனி, இந் நிகண்டுகளின் ஆதி வரலாறுகள் செந்தமிழ் பக்கட்கு இன்பந் தரத்தக்கனவாதலால், அவற்றை ஒவ்வொன்ருகக் காலமுறைப்படியே வைத்து என் சிற்றறிவிற் கேற்ப ஆராய்வேன். இம்முறையில் திவாகரம் முந்தியதென்று முன்னரே கூறினேன். இதற்கு முதனுால் ஆதி திவாகரம் என்பதொன்று எனச் சிலர் கூறுவர். அவ்வாறு ஒன்றுண்டென்பது எதலுைம் பெறப்படாமையால் அஃதிண் டாராய்ச்சியில்லை. இந்நூல் சேந்தன் என்னும் சிற்றரசன் வேண்டுகோளின்படி திவாகர முனிவராற் செய்யப்பட்டது; இது பற்றிச் சேந்தன் திவாகரம் எனவும் வழங்கும், இச் சேந்தன் என்பவன், காவிரிக் கரையிலுள்ள அம்பர் என்னும் நகர்க்கு அதிபதி. யென்பதும், ஆரியகுலத்தவனென்பதும், கல்வி கேள்வி மிக்கவ. னென்பதும் வடமொழி-தென்மொழிகளிற் செய்யுளியற்றும் வன்மையுடையவனென்பதும் இரவலர்க்கும் புலவர்க்கும் பெரிய களைகளுன. வனென்பதும் திவாகரத்தால் விளங்குகின்றன. அன்றியும், சம்பாபதி எனப்படும் புகார்த்தெய்வத்திற்கு அந்தாதியும்; பூரீராமபிரானது கோதண்டம், அருச்சுனன் காண்டீபம், முருகக்கடவுள் வேலாயுதம்