பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

பன்னிரு திருமுறை வரலாறு


யந்தணர்கள் ஆளுடைய பிள்ளையாரை யனேந்து 'அரத்துறையண்ணலார் தந்த பேரருள் தாங்குவீர்’ எனப் பணிந்து தமக்கு இறைவர் உணர்த்திய அனைத் தையும் எடுத்துரைத்தார்கள். ஆளுடைய பிள்ளையர் இறைவனது பேரருளே நினேந்து,

எந்தை ஈசனெம் பெருமான் ஏறமர் கடவுளென்றேத்திச் சிந்தை செய்பவர்க் கல்லாற் சென்றுகை

கூடுவதன்ருல் கந்த மாமலர் உந்திக் கடும் புனல் நிவாமல்கு கரைமேல் அந்தண் சோலைநெல்வாயில் அரத்துறையடிகள் தம்

அருளே,

என்ற திருப்பாடலே முதலாகக்கொண்ட திருப்பதி கத்தினேப் பாடி, அரத்துறையடிகள் தம் அருளே இது எனத் துதித்தருளித் திருவைந்தெழுத்தோதி முத்துச் சிவிகையில் ஏறியமர்ந்தார்; குடை நிழற்றத் திருச்சின்னம் ஊதத் திருநெல் வாயிலரத்துறையை யடைந்து சிவிகையினின்றும் இறங்கி, இறைவன் திரு முன்னர் வீழ்ந்திறைஞ்சினர்; என்னையும் பொருளாக இன்னருள் புரிந்தருளும் பொன் னடித்தலத்தாமரை போற்றியென்றெழுந்தார்.

அரத்துறையீசன் முத்துச்சிவிகையளித்த திரு வருட் செயலை நினைந்து ஆளுடைய பிள்ளையார் பாடிய திருப்பதிகம் எந்தையிசனெம் பெருமான் என்ற முதற் குறிப்புடையதாகும். இதன்கண் இவ்வற்புத நிகழ்ச்சி வெளிப்படக் கூறப்படவில்லே. இத்திருப் பதிகம் முழுவதும் இறைவனது தி ரு வ ரு ளி ன் பெருமையை நினைந்து போற்றும் நிலையில் அமைந் திருத்தலால், ஞான சம்பந்தப் பிள்ளேயார் தமக்கு முத்துச்சிவிகை அளித்தருளிய அரத்துறையடிகள் தம் அருளே நினைந்து இத்திருப்பதிகத்தைப் பாடிப் போற்றினரெனக் கொள்ளுதல் ஏற்புடையதாகும். திருஞானசம்பந்தர்க்கு அரத்துறையிறைவர் முத்துச் சிவிகை தந்தருளிய இவ்வரலாற்றினை,