பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞானசம்பந்தர் 8છે

பிள்ளையார், திருவரத்துறையினைக் கைதொழச் செல் லும் இந் நிலையில் அப்பழக்கத்தினை விடுத்து அரத் துறையண்ணல்பால் வைத்த ஆரா அன்பினல் அப் பெருமானச் சிந்தை செய்யும் பெருவிருப்புடன் மலரி னும் மெல்லிய திருவடிகள் தரையிற்பட்டு வருந்த விரைந்து நடந்தனர். அது கண்டு தாதையாரும் பரிவுற்றனர். பிள்ளையார் திருவைந்தெழுத்தோதிக் கொண்டு மாறன் பாடியென்ற ஊரினே அடை தற்குமுன் கதிரவனும் மேல்கடலிற் படிந்தனன். அன் றிரவு திருஞான சம்பந்தரும் அடியார்களும் மாறன் பாடியிலே தங்கினர்கள்.

ஞானசம்பந்தப் பிள்ளையாரது வழிநடை வருத்தத் தினத் திருவுளங்கொண்ட நெல்லாயிரத்துறை யீசன் அரத்துறை யந்தணரது கனவில் தோன்றி, ஞானசம் பந்தன் நம்பால் அணை கின்றன். அவனுக்கென முத் துச் சிவிகை, குடை, சின்னம் ஆகியவற்றை நீங்கள் நம்பாற் பெற்றுக்கொண்டு அவனேயடைந்து கொடுப் பீர்களாக’ என அருள் செய்து மறைந்தருளினர். அஃ துணர்ந்த அந்தணர் அனே வரும் வியப்புற்று விழித் தெழுந்து தாம்கண்ட கடவுட்காட்சியை ஒருவர்க் கொருவர் கூறி மகிழ்ந்து விடியற்காலத்தே திருவரத் துறைக்கோயிலேத் திறந்து பார்த்தனர். இறைவன் அருளிய படி முத்துச்சிவிகை, முத்துக்குடை, முத்துச் சின்னம்என்பன இருத்தலேக்கண்டு மகிழ்ந்து அவற்றை யெடுத்துக்கொண்டு மங்கலவாத்தியம் மு ழ ங் க ப் பிள்ளையாரை எதிர் கொண்டழைக்கச் சென்றனர்.

அரத்துறையந்தனர்களுக்கு அருளிய இறைவர், ஞான சம்பந்தப் பிள்ளேயார் கனவிலும் தோன்றி *அர த்துறை வள்ளலார்யாம், யாம் மகிழ்ந்தளிப்பன வற்றை நீ ஏற்றுக்கொள்ளலாம்’ எனக்கூறி மறைந் தனர். பி ஸ் ளே ய | ரு ம் திருவைந்தெழுத்தோதி யெழுந்து காலேக் கடன்களே முடித்து இறைவன் திரு வருளே யெண்ணியிருந்தனர். அந்நிலையில் அரத்துறை