பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞானசம்பந்தர் i (jg

அடையா யெனுமால் சரண் நீ யெனுமால் விடையா யெனுமால் வெருவா விழுமால் மடையார் குவளே மலரும் மருகல் உடையாய் தகுமோ இவளுண் மெலிவே,

எனத் தொடங்குந் திருப்பதிகத்தைப் பாடிப்போற்றி னர். அந்நிலையில் வணிகனும் விடம் தீர்ந்து உயிர்பெற் றெழுந்தான். கன்னியும் வணிகனுடன் பிள்ளையார் திருவடிகளில் வீழ்ந்து பணிந்தனள். புகலிவேந்த ராகிய பிள்ளையாரும் அவ்விருவர்க்கும் மணம் புணரும் பெருவாழ்வை வகுத்தருளினர். இந் நிகழ்ச்சியை,

வயலார் மருகற் பதிதன்னில் வாளர வாற்கடியுண் டயலா விழுந்த அவனுக்கிரங்கி யறிவழிந்த கயலார் கருங்கண்ணி தன்துயர் தீர்த்த கருணேவெள்ளப் புயலார் தருகையி ெைனன்னத் தோன்றிடும் புண்ணியமே.

என ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதியில் நம்பி யாண்டார் நம்பி குறித்துப் போற்றியுள்ளார்.

பாம்பு தீண்டியிறந்த வணிகனே உய்வித்தற் பொருட்டுப் பாடியருளிய இத்திருப்பதிகம், மருகற் பெருமானக் காதலித்த மங்கை யொருத்தியின் ஆற்றமை கூறிச் செவிலியிரங்குதல் என்னுந் துறை யில் அமைந்துளதே யன்றி, தன்னுடன் போந்த வணிகன் பாம்பிற்ை கடியுண்டிறத்தல் கண்டு ஆற்ருத கன்னியின் துன்ப நிலேயைப் புலப்படுத்துவதாக இல்லையே? எனச் சிலர் வினவுதல்கூடும். நிறைமொழி மாந்தராகிய திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் முதலிய அருளாசிரியர்கள் திருவாய் மலர்ந்தரு எளிய திருப்பதிகங்கள் மறைமொழிகளாகிய மந்திரங்க ளாதலின், அவையனைத்தும் அவர்கள் கருத்துக்களே வெளிப்படையாகத் தெரிவிப்பனவாக அமைந்திரு த் தல் வேண்டு மென்னும் இன்றியமையாமையில்லை. வணிகனுடன் போந்த கன்னியின் துயர் தீர்க்கக்கரு