பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*

தேவாரத் திருப்பதிகங்கள், வெட்டவெளியில் தனித்து இலங்கும் கம்பங்கள் போல் அல்லாது, முன் னும் பின்னும் பக்கங்களிலும் விளங்கும் அழகிய மலேத் தொடர்களின் நடுவே ஓங்கி வளர்ந்து சிறப்புடன் திகழும் சிகரங்கள் போன்றவை. இத்திருப்பதிகங் களுக்கு முன்னும், அழகிய இயல். இசை, நாடக நூல்கள், உள்ளன; பின்னும், உள்ளன; அந்நாளி னும் உள்ளன. குறட்பாக்களில் உள்ள கருத்துக்கள் பல இசைவடிவம் பெற்று இப்பதிகங்களில் இலங்குகின் றன. இப்பதிகங்களில் பண்களில் பாடப்பெற்ற உண் மைகள் பல மந்திரமாகவும் சாத்திரமாகவும் இதர நூல்களில் விளங்குகின்றன. இவ்வாறு தேவாரத் திருப் பதிகங்களுக்கும், அவைகளுக்கு முன்னும் பின்னும் அருகிலும் உள்ள நூல்களுக்கும் உள்ள தொடர்புகள் இந்நூலில் அழகாக விளக்கப்படுகின்றன.

தேவாரத் திருப்பதிகங்களைப் பற்றிய அறிவுபெற விரும்புவோர் அனே வரும் கற்கவேண்டியதொரு நூல் இந்நூல். தமிழ் மக்கள் அனைவரும் இந்நூலேக் கற்றும் கேட்டும், இதன் பயனேப் பெறுவார்கள் என்று நம்பு கிறேன்.

இவ்வரியதொரு நூலே ஆக்கிய அண்ணுமலைப் பல்கலைக்கழகத் தமிழாராய்ச்சிப் பகுதியினருக்கும். குறிப்பாக நிறைந்த சிவபக்தியும், தமிழன்பும், ஆ ர ய் ச் சி த் திறனும் உடைய திரு. வெள்ளே வாரண ஞர் அவர்களுக்கும் பல்கலைக்கழகத்தின் சார்பாக என் நன்றியைத் தெரிவித்துக்கொள்ளு கின்றேன்.

வே. சுப் பிரமணியம்,

• இல நகர் - ஆண்குமலை நகர், துணைவேந்தர்.

அண்ணுமலேப் பல்கலைக்கழகம்.

14- #2-#96; }