பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணிந்துரை

திருப்பனந்தாள் ரீ காசிமடம், இமயம் முதல் குமரிவரை செந் தமிழும் சிவநெறியும் வளரப் பெருந் தொண்டு புரிந்து வருகின்றது; அது சிறந்த திருவருள் திலேயமாகத் திகழ்கின்றது. இந்த மடத்திற்குச் சீரும் சிறப்பும் மிக்க தமிழ் நூல்கள் இயற்றி அருள் பெற்ற ஆதி குருமூர்த்தி, ரீ குமர குருபர சுவாமிகள் ஆவார்கள். அவர்களுக்குப் பின் வாழையடி வாழை யாக அருளும் அறிவும் நிறைந்த தலைவர்கள் இத்திரு மடத்தின் முதல் ஸ்தானத்தை அலங்கரித்திருக்கிருச் கள் அந்தத் தலைவர்களுள் தமிழுக்கும் சைவத் திற்கும் ஆக்கமான பல நல்ல பணிகளைச் செய்தற்கு வழிவகுத்த அறவோர், ரீலழரீ கா சிவாசி சுவாமிநாத த் தம்பிரான் ஆவார்கள். தமிழ் நூல்களே வெளியிடு வதற்கும், தமிழ் இலக்கியப் பயிற்சிக்கும், திருமுறைப் பயிற்சிக்கும், சைவ சித்தாந்த சாஸ்திரப் பயிற்சிக்கும், அறக்கட்டளையினேக் கா சிவா சி ரீலபூ சுவாமிநாத த் தம்பிரான் அவர்கள் ஏற்படுத்தி அப்பணிகளே அண்ணு மலேப் பல்கலைக் கழக நிர்வாகம் செய்யுமாறு பணி யிட்டிருக்கிருர்கள். இந்தக் கட்டளையின் படி சிவஞான போதச் சிற்றுரை, ஞானமிர்தம் ஆகிய சைவசித்தாந்த நூல்களே உரை விளக்கக் குறிப்புடன் அண்ணுமலேப் பல்கலைக் கழகத்தார் வெளியிட்டிருக்கிருர் கள்.

இப்பொழுது பன்னிரு திருமுறை வரலாறு இரண்டு பாகங்களாக எழுதப்பெற்று, முதல் ஏழு திருமுறை களாகிய தேவாரத் திருமுறைகளின் வரலாறு முதற் பகுதியாக வெளியிடப்பெறுகிறது.

இப்பன்னிரு திருமுறைகளும் த மி ழ் ந ட் டி ல் சமயத்திற்கும், இலக்கியத்திற்கும் உயிர் நரடியாக