பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞானசம்பந்தர் #27

திருப்பதிகத்தைப்பாடி மங்கையர்க்க ரசியார் குலச் சிறையார் ஆகிய இருவரது திருத்தொண்டினையும் திருவாலவாய்ப் பெருமான் ஏற்றருளிய திறத்தைச் சிறப்பித்தருளினர். பின்பு குலச்சிறையாருடன் திரு வாலவாய்த் திருக்கோயிலே வலங்கொண்டு இறைவர் திருமுன்னின்று நீலமாமிடற், ரு லவாயிலான், பால தாயினர். ஞாலமாள்வரே என்ற திருப்பதிகத்தைப் பாடிப்போற்றினர்.

ஆலவாயிறைவரைப் பணிதற்குத் திருக்கோயிலி னுள்ளே புகும் மங்கையர்க்கரசியார், இறைவரைக் கும்பிட்டுக் கோயில் முன்றிலில் அனேந்த திருஞான சம்பந்தப் பிள்ளேயாரைக் கண்டு அவருடைய திரு வடித்தாமரைகளில் வீழ்ந்து பணிந்தார். பிள்ளேயார் எழுதரிய மலர்க்கையால் அவரை எடுத்தார். “யானும் என் நாயகனும் செய்த தவம் என் கொலோ’ என மங்கையர்க்கரசியார் மனமுருகிப் போற்றினர். புறச் சமயச் சூழலுள்ளே இருந்தும் சிவனடித்தொண்டினே மறவாது வாழும் பெருந்தகையீர், உம்மைக் காணும் பொருட்டே யாம் இங்கு வந்தோம் எனக் கூறிப் பிள்ளேயார் பாண்டிமாதேவியார்க்கு விடைகொடுத்து அனுப்பினர். செல்வமல்கிய திருவாலவாய்த் திருக் கோயிலில் தங்கித் தொண்டு புரிந்துவரும் அடியார்கள் பிள்ளேயாரை அணுகிப் புறச்சமய இருள் கெடத் தாங்கள் இங்கெழுந்தருளுதற்கு அடியேங்கள் அள விறந்த தவமுடையோம் எனக் கூறிப் போற்றினர்கள். அவர்களுக்கு அருளுரை கூறிய ஆளுடைய பிள் அளயார், திருக்கோயிற்புறத்தணந்து குலச்சிறையார் காட்டிய திருமடத்தில் அடியார்களுடன் அமர்ந்திருந் தார். பாண்டிமாதேவியார் ஆனேயின் படி அமைச்ச ராகிய குலச்சிறையார் ஆளுடைய பிள்ளையார்க்கும்

அடியார்களுக்கும் நல்விருந்து அளித்தார்.