பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞானசம்பந்தர் 14 f

வுண்மையை ஏட்டிலெழுதி ஆற்றிலிட்டால் உண்மை காண்போம்” எனவுரைத்தனர். அ ந் நி லே யி ல் பாண்டியன், ஞான சம்பந்தரை நோக்கினன். பிள்ளே யாரும் சைவசமய வுண்மைகளைத் தொகுத்துத் திருப் பாசுரமாகப் பாடத்தொடங்கினர்.

வேத நூல்களிற் சொல்லப்படும் ஒழுகலாறு உல கியல் வாழ்வின் பாற் படுமென்பதும், அழிவிலின் பப் பெரு வாழ்வாகிய வீடுபேறடைவிப்பதாய் என்றும் சிதைவின்றி நிலைபெற்ற மெய்ந்நெறி சிவநெறியே யென்பதும் ஆகிய சிறந்த வுண்மைகளே, தம்முடைய மதமே சிறந்ததெனக் கூறிக் கலகஞ் செய்யுமியல் புடைய ராய் அங்குள்ள சமணர்கள் அறியமாட்டார் களாயினும் , திருநீறு பூசப்பெற்றுப் பழவினேப்பாசம் நீங்கி இருவினையொப்புடையய்ை இ ைற வ னே யடைந்து இன்புறும் பக்குவ நிலேயுற்ற பாண்டியன் அறிதல் வேண்டுமென்னும் பேரருளுடையராகிய திருஞானசம்பந்தர்,

வாழ்க அந்தணர் வானவர் ஆனினம் வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக ஆழ்க தீயது எல்லாம் அரன் நாமமே சூழ்க வையக முந் துயர் தீர்கவே.

என்று தொடங்கும் திருப்பாசுரத்தைப் பாடியருளி ஏட்டில் எழுதி அவ்வேட்டினேத் தமது திருக் கரத்தால் வைகையாற்றில் இட்டருளினர். பிறவி யெனும் பேராற்றை அருந்தவருள்ள ம் எதிர்த்து எதிர் செல்வது போன்று அவ்வேடு வைகைப் பெருவெள்ளத்தைக் கிழித்து எதிர் ஏகியது. குலச் சிறையார் குதிரைமீது இவர்ந்து வைகையாற்றின் கரைவழியாக அதனேத் தொடர்ந்து சென்ருர். இத்திருப்பாக ரத்தில் வேந்தனும் ஓங்குக’ எனப் பிள்ளே யார் பாடிய தல்ை முன்பு கூனயிைருந்த