பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142

பன்னிரு திருமுறை வரலாறு


பாண்டியன் கூன் நீங்கி, நின்றசீர்நெடுமாறன் ஆயினன்.

தம்மால் வைகையாற்றில் இடப்பட்ட ஏடு எதிரேறி விரைந்து செல்லக்கண்ட பிள்ளேயார்,

வன்னியு மத்தமு மதிபொதி சடையினன் பொன்னியல் திருவடி புதுமல் ரவைகொடு மன்னிய மறையவர் வழிபட அடியவர் இன்னிசை பாடலார் ஏடகத் தொருவனே.

என்று தொடங்குந் திருப்பதிகத்தைப் பாடிப்போற்றி ஞர். அப்பொழுது அவ்வேடு வைகையின் வடகரையி லமைந்த திருக்கோயிலின் பக்கத்தில் தேங்கிய நீர் நடுவே வந்து நின்றது. அதுகண்ட குலச்சிறையார், குதிரையை விட்டு இழிந்து ஆற்றில் இறங்கி ஏட்டினே யெடுத்துத் தலைமேற்கொண்டு, அங்கு வைகைக் கரையிற் கோயில் கொண்டெழுந்தருளிய சிவ பெருமானே யிறைஞ்சி விரைந்து மீண்டார். ஞான சம்பந்தப் பிள்ளையாரை வணங்கித் தாம் கொணர்ந்த ஏட்டினே நின்றசீர்நெடுமாறன் முதலிய யாவருங் காணக் காட்டினர். அதனேக்கண்டு அங்குள்ளார் அனைவரும் மகிழ்ந்து இறைவனது திருவருளே வியந்து போற்றினர்கள். வைகையாற்றில் எதிரேறிச் சென்ற ஏடு, திருவேடகத் திருக்கோயிலின் பாங்கே அணேந்து நின்ற செய்தி, அப்பொழுது பாடிய வன்னியு மத்தமும்’ என்ற பதிகத்தின் திருக்கடைக் காப்பில் "ஏடு சென்று அனேதரும் ஏடகத்தொருவனே' என வரும் தொடராற் புலனுதல் காணலாம்.

‘வாழ்க அந்தணர் எனத் தொடங்கும் திருப் பாசுரம் தென்னவனுகிய பாண்டியனல் தெளிவிக்கப் பட்டுந் தெளிவடையாத சமணர்கள் தெளிய வேண்டி அவர்களோடு இயற்றும் புனல் வாதத்தில் 邸芬貌盟5磅鼬 யாற்றில் எதிரேறிச் செல்லும்படி ஏட்டில் எழுதியிடப்