பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162

பன்னிரு திருமுறை வரலாறு


பாவையும் சிவபெருமானே யிறைஞ்சி ஞானசம்பந்தரை வணங்கி நின்ருள் .

சிவநேசர் திருஞானசம்பந்தரை வணங்கி அடி யேன் பெற்ற பூம்பாவையைத் தேவரீர் திருமணஞ் செய்தருளில் வேண்டும் என வேண்டிக்கொண்டார். அதுகேட்ட பிள்ளேயார். அவரை நோக்கி நீவிர் பெற்ற பெண் விடத்தினுல் இறந்தபின் பு இறைவன் திருவரு ள ல் பூம்பாவையாக யாம் மீண்டும் பிறப்பித்தோம். ஆதலால் இவள் எமக்கு மகளாவாள். எனவே யாம் இவளே மணத்தல் தகாது என மறுத்தார்; சிவநேசர்க் கும் அவருடைய சுற்றத்தார்க்கும் மறை முறையினே எடுத்துரைத்து மயக்கம் நீக்கினர். பிள்ளேயார் கூறும் உரை தக்கதென வுணர்ந்த சிவநேசர், பூம்பாவை யைப் பிறரெவர்க்கும் மணஞ்செய்து கொடுக்க இசை வின்றிக் கணனிமாடத்தே இருக்கச் செய்தனர். இறைவன் திருவருளின் வண்ணமாகிய பூம்பாவையும் சிவனருளேச் சிந்தித்திருந்து சிவத்தைச் சேர்ந்தாள் என்பது வரலாறு.

மட்டி ட்ட புன்னே யங்கானல்’ எனத் தொடங்கும் இத்திருப்பதிகத்தில் சிவபெருமானுக்குத் திங்கள் தோறும் நிகழுஞ் சிறப்புடைய திருவிழாக்களே யெடுத் துக்கூறி, இத்தகைய நல்விழாப் பொலிவு கண்டு மகிழாது பூம்பாவாய் இவ்வுலகினத் துறந்து போகின் றனேயோ என வினவும் முறையில் போதியோ பூம் பாவாய்' எனப் பாடல்தோறும் ஞான சம்பந்தர் குறிப் பிட்டழைத்தலானும், இதன் திருக்கடைக் காப்பில் தேனமர் பூம்பாவைப் பாட்டாகச் செந்தமிழான், ஞானசம்பந்தன் நலம்புகழ்ந்த பத்தும் என இப் பாடல்கள் பூம்பாவையின் நலம் புகழ்ந்தனவாகக் கூறப்படுதலானும் இத் திருப்பதிகம் எலும்பைப் பெண் ஆக உருக்கொண்டெழும்படி ஞானசம்பந்தரால் அருளிச் செய்யப்பெற்ற தென்பது உய்த்துணரப்படும்.