பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174

பன்னிரு திருமுறை வரலாறு


இங்ஙனம் இரு திறத்தாராலும் உறுதிசெய்யப் பெற்ற திருமணம் நிகழ்வதற்குள், வட நாட்டிலுள்ள கைமன்னர் சேனை, தமிழ்நாட்டின் மேற் போர் குறித் துப் புறப்படுவதாயிற்று. இப் பகைப்படை யெழுச் தியை முன்னமே குறிப்பாலுணர்ந்த தமிழ்நாட்டு வேந்தன், போராற்றல் மிக்க கலிப்பகையாரைச் சேஜனத் தலைவராக நியமித்துப் படைகளுடன் வட புலத்திற்கு அனுப்பின்ை. இங்ங்னம் நாடாளும் வேந்தனுக்கு உற்றுழி யுதவுதற்பொருட்டுச் சேனே களுடன் வடநாடு சென்ற கலிப்பகையார், நீண்ட நாட்கள் அங்கே தங்கியிருந்து பகைவரைப் பொருது வெல்லுந் தொழிலில் ஈடுபட்டு வினைபுரிவாராயினர். இந் நிலையில் இவர்க்குத் திலகவதியாரை மணஞ் செய்து தருவதாக இசைந்திருந்த புகழஞர் நெரு நலுளைெருவன் இன்றில்லே யெனத் தொன்று தொட்டு வழங்கும் நிலையாமையைப் பொருந்தி ஊழ் வினேப் பயனல் நோய்வாய்ப்பட்டு இறந்து விண்ணுல கடைந்தார், அந்நிலையில் அவர்தம் இன்னுயிரனேய ம&னவியார் மாதினியார், சுற்றமுடன் மக்களேயும் துகளாக எண்ணி உயிர் நீத்துக் கற்புநெறி வழுவாது இணவனுருடன் சென்ருர் இவ்வாறு தந்தையுந் தாயும் இவ்வுலக வாழ்வை நீத்த துன்ப நிலையுட் பட்டுத் துளக்கமுற்ற திலகவதியாரும் மருள் நீக்கி யாரும் ஆற்றெணுத்துயரில் அழுந்தினர்கள் அறி வினுல் விக்க பெரியோர்கள் உலகியல்பினை யெடுத் துரைத்துத் தேற்ற ஒருவாறு மனந்தெளிந்து தம் தந்தை தாய்க்குச் செய்யவேண்டிய ஈமக் கடன் களைச் செவ்வனே செய்து முடித்தார்கள்.

தமக்கையார் தவதிலே

இவர்கள் இங்ங்ணமிருக்க, வடநாட்டிற் போர் புரியச் சென்ற கலிப்பகையார், பகைவரது போர்க் களத்திலே தமது தறுகணுண்மையினேப் புலப்படுத்தி மாற்ருரை யழித்துத் தம் உயிரைக் கொடுத்துப் பூத வு ம்பை நீத்துப் புகழுடம்பெய்தினர். இத் துன்பச்