பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசர் வரலாறு i75

செய்தி திலகவதியார் செவிக்கு எட்டியது. இதனேக் கேள்வியுற்ற திலகவதியார், என் தந்தையும் தாயும் என்னே அவர்க்கே (கலிப்பகையார்க்கே) கொடுப்ப தாக இசைந்தார்கள். அந்த முறையால் அவர்க் குரிய பொருள வேன், ஆதலால் இவ்வுடம்பைத் துறந்து என்னுயிரை அவருயிரோடு இசைவிப்பேன்’ எனத் தமது உயிரைவிடத் துணிந்தார். அப்பொழுது அவருடைய தம்பியாராகிய மருள் நீக்கியார், தமக் கையாராகிய திலகவதியார் பாதங்களில் வீழ்ந்து புலம்பினர்; அன்னேயும் அத்தனும் இறந்த பின்னரும் தமக்கையாகிய உம்மை வணங்கப் பெறுதலினல் யான் இதுகாறும் உயிர் தரித் திருக்கின்றேன். இந் நிலேயில் ஒன்றுமறியாத என் சீனக் கைவிட்டுச் செல் வீராயின் யானும் உமக்கு முன்னே உயிர்துறப்பேன் எனக்கூறி வருந்தினர்.

தம்பியாராகிய மருள் நீக்கியார் இவ்வாறு ஆதரிப் பாரின்றி வருந்தும் இடர் நிலையைக் கண்டு திலக வதியார் உள்ளங்கலங்கினர். தம் தம்பியார் இவ் வுலகிற் புகழுடன் நிலேபெற்று வாழ வேண்டுமென த் தாம் கொண்ட பேரருளானது, தம்முயிரைத் துறந்து விண்ணுலகடைய எண்ணிய தமது துணியினே விலக் கின மையால், தம்பியின் பொருட்டு இவ்வுலகில் உயிர் தாங்கி யிருப்பதாக உறுதி கொண்டார் இன்ன லுறுத்தும் பொன் னினும் மணியினுமாகிய அணிகலன் களேப் பூணுது அனேத்துயிரையும் வாழ்விக்கும் அருளேயே அணிகலகை மேற்கொண்டு மனேயின் கண் இருந்தே தவப்பெருஞ் சீலராய்த் தம்பியைப் பேணி வளர்ப்பாராயினர்.

இவ்வாறு இளம்பருவத்தினராகிய மருள் நீக்கியார் தாயுந் தந்தையுமின்றி வருந்தியபொழுது அவருடைய தமக்கையாராகிய திலகவதியார், தம்பியார் உளராக வேண்டுமெனக் கொண்ட பெருங்கருணேயால், அவர்க் குத் தாயென அமைந்து அவரைப் பேணி வளர்க்க