பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226

பன்னிரு திருமுறை வரலாறு


மறைக்காட்டீசர் திருவருள் பெற்ற ஆளு ைய பிள்ளையாரும் அப்பரடிகளும் திருமறைக் காட்டிலுள்ள திரும்டத்தில் அடியார்களுடன் வந்து அமர்ந்தனர். தாம் அரிதில் திறக்கப்பாடிய தன்மையினையும் ஆளு டைய பிள்ளையார் விரைவில் அடைக் சப்பாடிய எளிமையினேயும் கருதிய திருநாவுக்கரசர், திருக்கதவு திறக்கத் தாழ்த்ததன் காரணம் இறைவரது திருக்குறிப் பினே யான் உணராது அயர்த்தமையே எனக் க.லே யுற்ற மனத்தினராய், அத் திருமடத்தின் ஒருபால் துயில்கொண்டார்.

வாய்மூரடிகள் ஆடல் கண்டு மகிழ்தல்

இவ்வாறு அப்பரடிகள் மறைக்காட்டிறைவரை மனத்தின் கண் நினேந்து உறங்கும் பொழுது, சிவபெரு மான், பொன்மேனியில் வெண் ணிறு பூசிய சைவ வேடத்தினராய் அவர் கனவிலே தோன்றி. அன்ப, யாம் திருவாய்மூரில் இருப்போம், நீ நமமைத் தொடர்ந்து வருவாயாக’ என்று கூறி முன்னே செல் வாராயினர். அந்நிலையில் மெய்யுணர்வு பெற்று விழித்தெழுந்த திருநாவுக்கரசர், 'யான் இருந்த இ த் தில் என்னே த் தேடிக்கொண்டு வந்து தம்மைத் திரு வாய்மூர்த் தலைவரென அடையாளங்களுடன் சொல்லி அங்கே வா என்று கூறிப்பே யினர், அஃதென்கொல்? என ஐயமுற்று,

எங்கே யென்னே இருந்திடத் தேடிக்கொண் டங்கே வந்தடை யாளம் அருளினர் தெங்கே தோன்றுந் திருவாய்மூர்ச் செல்வனர் அங்கே வாவெனறு போரை தென்கெ லோ.

என்னுந் திருக்குறுந்தொகையைப் பாடிக்கொண்டு ‘எம்பெருமான் அருள் இதுவாயின், யானும் உடன் போவேன்’ என எழுந்து வேதவன மாகிய திருமறைக் காட்டினை விட்டு நீங்கி விரைந்து பின் சென் ருர்,