பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசர் வரலாறு 22?

இ ைற வ ர், அப்பரடிகளுக்கு முன்னே கன விற் காட்டிய திருக்கோலத்தோடும் விரைந்து நடந்தருளி ஞர். அதுகண்டு நாவுக்கரசர் அவரைப் பின் தொடர்ந்து விரைந்து சென் றர். இங்ங்னம் நெடும் பொழுது விரைந்து நடந்தும் தமக்கு முன் செல்லும் வாய்மூர்த் தலைவரைத் திருநாவுக்கரசர் அணுகப் பெற்றிலர். அந்நிலேயிற் சிவபெருமான், அணிமை யிலே காட்சி கொடுப்பவர் போலப் பொன்மயமான திருக்கோயிலே எதிரே காட்டி, அதனுள்ளே புகுந்து மறைந்தருளினர். திருநாவுக்கரசர், தம்மை அழைத்து வந்த வாய்மூர்த் தலைவர் இடைவழியில் தம்மைவிட்டு மறைந்தமையெண் ணி மனங்கலங்கினர்.

இந் நிலேயில் ஆளுடையபிள்ளே யார், தம் அன் புடைய நண்பர் திருநாவுக்கரசரைக் கானது. அரசர் திருவாய்மூர்க்குச் செல்கின் ருர் என அடியார்கள் சொல்லக்கேட்டு, அவரைப் பின் தொடர்ந்து வந்து சேர்ந்தார். தம்பால் வைத்த பேரன்பில்ை தம்மைத் தேடி வருகின்ற திருஞானசம்பந்தப் பிள்ளையாரைச் சேய்மையிற் கண்டு மகிழ்ந்த திருநாவுக்கரசர், ஆளு டைய பிள்ளையார் தம்மை அணுகிய நிலையில், இறைவர் திருக்குறிப்பறியாது திருக்க தவந் திறக்கப் பாடி ய என்னேக் காட்டிலும் செந் தமிழ்த் திறத்தால் நன்கு செறியப்பாடி அடைப்பித்த நயஞ்செறிந்த நன்மொழியாளராகிய ஞானசம்பந்தப் பிள் 8ள யார் இதோ வந்து நிற்கின்ருர், எளியேற்கே யல்லாது இப் பெருந்தகையார்க்கும் இறைவர் தம்மை மறைக்கும் வன் மையுடையரோ ?’ என வினவுங் குறிப்புடன்,

திறக்கப் பாடிய என்னினுஞ் செந்தமிழ் உறைப்புப் பாடி அடைப்பித்தார் உந்தின்ருர் மறைக்க வல்லரோ தம்மைத் திருவாய்மூர்ப்

பிறைக்கொள் செஞ்சடையாரிவர் பித்த ரே.