பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசர் வரலாறு 22

ஞானசம்பந்தர் விரைவில் அடைக்கப்பாடியதும் ஆகிய அருமை எளிமை நோக்கி, இறைவர் திருவுள்ளம் அறியாது அயர்த்தேன் என அஞ்சிக் கவலே கொண்டு திருமடத்தின் ஒருபால் உறங்கும் பொழுது. சிவபெரு மான் அவருடைய கனவில் தோன்றித் தன்னே வாய் மூர்த் தலேவன் எனக் கூறி வாய்மூர்க்கு வா என அழைத்துச் சென்றன ரென்பது,

மன்னு மாமறைக் காட்டு மணுளனர் உன் னி உன்னி உறங்குகின் றேனுக்குத் தன்னே வாய்மூர்த் தலைவன மாசொல்வி என்னே வாவென்று போனும் அதென்கொலோ.

என அப்பொழுது அப்பரடிகள் பாடிய திருப்பாடலால் இனிது புலனும். இவ்வாறு தம் கன விடை த்தோன்றிய இறைவரைக் கண்டு நீர் யார் என வினவ அவர் * நீ கொண்ட அச்சத்தைத் தவிர்வாயாக, உன்னே அழைக்க வந்தேன் என மறுமொழி பகர்ந்தன ரென்பதனே,

தஞ்சே கண்டேன் தரிக்கிலாது ஆரென்றேன் அஞ்சேல் உன்னே அழைக்க வந்தேன் என்ருர் ’

என்ற தொடரால் அடிகள் குறிப்பிட்டுள்ளார். இங்ங் னம் தம்மை அழைத்துச் செல்லும் வாய்மூர்ப் பெரு மானே மிக அணிமையிலே தம் ண்ணெதிரே காணப் பெற்றும் தாம் அவரைப் பின்தொடர்ந்து தேடிய பொழுது அவ்விறைவர் இடைவழியில் மறைந்தருளத் தாம் அவரைக் காணுது கலக்கமுற்ற தன்மையினே.

கழியக் கண்டிலேன் கண்ணெதிரே கண்டேன் ஒழியப் போந்திலேன் ஒக்கவே யோட்டந்தேன் வழியிற் கண்டிலேன் வாய்மூரடிகள்தம் சுழியிற் பட்டுச் சுழல்கின்ற தென்கொலோ,

என்ற பாடலாற் புலப்படுத்தினமை காணலாம். இங்ங்னம் நடுவழியில் இறைவர் மறைந்தமைகண்டு