பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

w

தரமூர்த்தி கவாமிகள் வரலாறு

சுந்

தேவாரத் திருமுறைகளுள் ஏழாந் திருமுறையாகத் தொகுக்கப்பெற்றுள்ள திருப்பதிகங்களேப் பாடியருளிய அருளாசிரியர், நம்பியாரூரராகிய சுந்தரமூர்த்தி சுவா மிகளாவர். சிவனடி யே சிந்திக்கும் பெருந் திருவின சாகிய மெய்யடியார்களின் பேரன்பினையும் அத்தகைய தொண்டர்களுக்கு எளிவந்து அருள் புரியும் இறைவ ைது பெருங்கருனேத் திறத்தையும் உலகமக்கள் நன்கு ணர்ந்து உய்திபெறும் வண்ணம் நேசம் நிறைந்த உள் காத்தால் ஈசன டியார் பெருமையினேப் போற்றி உரைக் கும் திருத்தொண்டத் தொகையெ ன்னும் திருப்பதி கத்தை நம்பியாரூரர் அருளிச் செய்துள்ளார். பலவகை நன்னெறிகளிலும் நின்று நிலேபெற்ற பேரன்பினுல் தத் தமக்கியன்ற திருத்தொண்டுகளே ப் புரிந்து இறைவ: னடி சேர்ந்த செம்புலச் செல்வர்களாகிய திருத்தொண் டர்களின் திருப்பெயர்களேப் ேட | ற் றி பரவு வது திருத்தொண்டத் தொகை யெனும் இத்திருப் பதிகமாகும். இதனேத் தென்தமிழ்ப் பயனுய் வந்த திருத்தொண்டத் தொகை’ எனச் சேக்கிழாரடிகள் சிறப்பித்துப் போற்றியுள்ளார்.

திருநாரையூரிற் பொல்லாப் பிள்ளையார்பால் அருள் பெற்ற நம்பியாண்டார் நம்பியென்பார், இத்திருத் தொண் டத்தொகையின் வகையாகத் திருத்தொன் டர் திருவந்தாதி யென்னும் செந்தமிழ்ப் பனுவல் இயற்றியுள்ளார். அருண்மொழித் தேவராகிய சேக் கிழ டிகள், சுந்தரமூர்த்தி சுவாமிகளேப் பாட்டுடைத் தலைவராகக்கொண்டு திருத்தொண்டத் தொகையின் விரியாகத் திருத்தொண்டர் புராண மென்னும் செந். தமிழ்ப் பெருங்காப்பியத்தை இயற்றியுள்ளார். பெரிய